Tuesday, October 19, 2010

இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா

இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா

"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'

"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'

"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (282)
சிவா - Madurai.,இந்தியா
2010-10-18 04:57:29 IST
இலவசமா கிடக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.., அது எல்லோருக்கும் வேலை மட்டுமே...! நன்றி...! வாழ்த்துக்கள்..!...
subramani - houston,யூ.எஸ்.ஏ
2010-10-18 03:55:33 IST
இலவசம் இலவசம் இலவசம் தனது சுயநலத்துக்காக உழைத்தவன் வரிபணத்தை சோம்பேறிக்கு இலவசமாக கொடுக்காதே. இலவசம் கொடுக்க அசை இருந்தால் உனது வருமானத்தில் இருந்து கொடு. இலவசத்தால் எழுவது சதவிதம் பணம் கொள்ளை போகிறது. இதை பங்கிடுபவர்கள் அரசியல்வாதி அதிகாரிகள். என்ன நாயம் இந்தியன் சிந்திக்க தொடங்கிவிட்டான்...
Murugesan - Amen,இந்தியா
2010-10-18 03:43:27 IST
நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்ட தமிழனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்......
jood - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-18 03:34:09 IST
கிடைத்தது போதும் தமிழா,மீண்டும் பொங்கி எழு அடுத்த பொங்கல் இல்லவசமிந்திருக்கு....
செந்தில்குமார் - ஜுரிச்,சுவிட்சர்லாந்து
2010-10-18 00:17:57 IST
இது நூறு சதவிகிதம் உண்மை. நம் தமிழ் நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு தான், கேடு கெட்ட அரசியல்வாதிகள் மக்களை சொம்பேரியாக்கியது மட்டுமில்லாமல் முட்டாளும் ஆக்கிறார்கள். திமுக மற்றும் அந்த கட்சியின் தலைவர்களும் ஒழியவேண்டும். இதை வழங்கிய நண்பர்களுக்கு மிக்க நன்றி. செந்தில் ஜுரிச்...
muthuraman - madurai,இந்தியா
2010-10-17 18:10:34 IST
நோட்டீஸ் அடித்தால் மட்டும் போதாது அதை பின் பற்ற வேண்டும் . ஓடுக்கு ௫௦௦ ருபாய் என்று பேரம் பேசும் போது இது மறந்து போகும் ....எப்படி என்றால்லும் இதை தமிழகம் முழுவதும் எதிர் பார்க்கிறோம் ...வாழ்த்துக்கள் இதை செய்த கைகளுக்கு....வாழ்க ( பண ) ஜனநாயகம் .....
மணிமாறன் கே. Abudhabi - UAE,இந்தியா
2010-10-17 17:22:10 IST
எங்கள் தினமலர்க்கு நன்றிகள். நம் தமிழ் நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு தான்...... இலவசம் என்ற பெயரில் நம்மை பிச்சைகாரர்கள் ஆக்கி கொண்டிருக்கிறார்கள் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள். இலவசத்தின் பயன் முழுதாக திமுக மற்றும் அந்த கட்சியின் தலைவர்களுக்கு சென்றடைகிறது. எலும்பு துண்டு மக்களுக்கு வாசனைக்காக.... ஓட்டுமொத்த தமிழனின் திறமையை சாகடிக்கும் திமுகவை சாகடிபோம்...
அப்துல் அஹில் - துபாய்,இந்தியா
2010-10-17 14:54:02 IST
இலவசம் வழங்குகின்ற அரசுக்கும், மக்களுக்கும் செருப்பால் அடிக்கிற மாதிர்யான நோட்டீஸ்.நன்றி எழுத்திய கரங்களுக்கு....
ஜென்சன் - துபாய்,இந்தியா
2010-10-17 14:51:11 IST
really the words are correct ,our peoples suppose to knows about the reality...
ராஜா - மதுரை,இந்தியா
2010-10-17 14:36:39 IST
கம்முநிச்ட்டுகள் ஆ தி மு க வும் இலவசம் வேண்டாம் என்று மீட்டிங்கில் சொல்லுவார்கள் ஆனால் அவர்கள் தான் தி மு க கொடுக்கும் இலவசம் பொருட்களுக்கு முதலில் ஓடுவார்கள் எது அனைவரும் தெரிந்த உண்மை...
thamilan - doha,இந்தியா
2010-10-17 13:43:05 IST
neengal இந்த விஷயத்தில் ஆதரவு தருவதென்றால் இந்த முக்கிய செய்தியை உங்கள் நண்பர்களுக்க (10 பேருக்காவது) ஈமெயில அனுப்புவூம் ்...
krk - manama,பஹ்ரைன்
2010-10-17 12:51:57 IST
இந்த நோட்டீஸ் / செய்தி தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் கிடைக்க/சென்றடைய தயவுசெய்து ஏற்பாடு செய்யவும் - வெளிநாட்டில் உழைத்து சாப்பிடும் தமிழன்...
ranjith - india,இந்தியா
2010-10-17 12:16:27 IST
i cant agree that notice. If the petrol price is increased we are making strike and blame the govt. The govt is providing this free facility from capturing the money from rich one. One person who is earning the money in their hand level they have to spend it little nail level. The govt is doing the same to people....
sankar - tirunelveli,இந்தியா
2010-10-17 12:09:19 IST
தமிழ் வென்றாக வேண்டும் அதற்கு தமிழன் உழைத்துத்தாக வேண்டும் தமிழா உழைத்திடு! உயர்த்திடு !!...
g.s.rajan - chennai,இந்தியா
2010-10-17 11:09:52 IST
இலவசம் என்றுகொடுப்பதைதங்கள் சொந்தப்பணத்தில்இருந்தோ,கட்சிப்பணத்தில் இருந்தோ கொடுக்கட்டும் இந்த கர்ண மகா பரம்பரைகள். இதை யாரும் தடுக்கபோவதில்லை மக்களின்வரிப்பணத்தை வாரி வழங்க,வீணடிக்க இவர்கள் யார்? மருத்துவம்,கல்வியை அனைவருக்கும் இலவசமாக தரலாம் அதில் தவறு ஒன்றும்இல்லை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் அவர்களே தங்களுக்கு தேவையானவற்றை,தேவையான நேரத்தில்வாங்கி கொள்ள முடியும் தரமான குடிநீர்,தரமான சாலைகள் சுத்தம் சுகாதாரமான சுற்றுப்புர சுழல், கழிப்பிடவசதிகள் கட்டாயம் அனைவருக்கும் அவசியம். விலைவாசியை குறைக்க சொன்னால் ஏற்றுகின்றனர் வியாதிகள் இல்லா சூழல்,கொசுக்கள் மூலம் பரவும் பலவகை வியாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்.வியாதிகள் இங்கு இலவசம். குரங்கு கையில் பூமாலை சிக்கியதை போல் நமதுஅரசியல் வாதிகளிடம் சிக்கிய ஜனநாயகம் சின்னாபின்னமாகி சீரழிந்துவருவதுவேதனையை அளிக்கிறது. மக்களுக்காகபயன்படவேண்டியஜனநாயகம் நமது சுயநலஅரசியல்வாதிகளுக்கு நன்றாக பயன்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை ஜி.எஸ்.ராஜன் வேளச்சேரி சென்னை...
பாலாஜி சுப்பையா - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-17 11:06:46 IST
கடன் வாங்கி இலவசம் தேவையா. தயவு செய்யது இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா...
பாலாஜி சுப்பையா - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-17 10:58:04 IST
நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்ட தமிழனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...
பாரதி.சி - தஞ்சாவூர்,இந்தியா
2010-10-17 10:33:44 IST
இந்த தமிழன் இம்மியும் உருப்பிடமாட்டன் எறும்பு முன்னேறி யானையை வீழ்த்தும் ஏணி வைத்து ஏற்றிடினும் இவன் ஏறான் என்றாலும் ஒரு கை பார்த்திடலாம் 'இவன் இழிவினில் ஒரு துளி தீர்த்திடலாம் ' என்பதற்கா இந்த துண்டறிக்கை மானம் உள்ள தமிழனின் குருதி சூடானால் உழைக்கிற நோக்கம் உறுதியாகும் .கெடுக்குற நோக்கம் வளராது....
saravanan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-17 10:13:04 IST
கிலோ ஒரு ரூபாய் அரிசி இலவசம் அதை சாப்பிட்டால் நோய் வரும் என்றே தெரிந்து தமிழக அரசு இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் வழங்கியுள்ளது....
shivani - melbourne,இந்தியா
2010-10-17 10:12:27 IST
karunanidi தன் குடும்பத்திற்கு சேர்த்து வைத்திருக்கும் சொத்தைஅனைத்தையும் மக்களுக்கு இலவசமாக கொடுத்தால் மிக நன்றாக இருக்கும்...
velmurugan - மாலே,இந்தியா
2010-10-17 10:03:49 IST
i agree with mr . சரவணன் மாலதீவு," மக்கள் திருந்த மாட்டாங்க! அரசியல்வாதி திருந்தவும் விடமாட்டான்!? தனி மனித சுய ஒழுக்கம் வராத வரைக்கும் நாடு திருந்தவே போறதில்லை!" வேல்முருகன் மாலதீவு...
நாராயணன் - சென்னை,இந்தியா
2010-10-17 09:28:36 IST
சொல்வது எல்லாம் சரியில்லை.ஏனெனில் ஒவ்வொரு இலவசமும் உடன் பிறப்புகளுக்கும் தலைமைக்கும் வருமானம். லஞ்சம் கொடுக்காம எதையும் வாங்கமுடியாது இதுல தான் தி.மு.க வளருது, ஆனா இத வெளிய தெரியாம பண்றது தான் தி.மு.கவின் சாமர்த்தியம். ஆனாலும் ஒப்புகொள்ளவேண்டிய விஷயம்.வெளிக்கொண்டுவந்து புரிந்துகொள்ள செய்ததற்கு பாராட்டுக்கள்...
சுரேஷ் குமார் R - singaporecamp,இந்தியா
2010-10-17 08:53:59 IST
எல்லா தமிழனும் உணரவேண்டும். இல்லையேல் இலவச அடிமை ஆகி விடுவாய் .சிந்தித்துபார்....
ரமணி த ர - சென்னை,இந்தியா
2010-10-17 08:45:33 IST
அருமை, அருமை, இதை விட தெளிவாக சொல்ல ஒரு வாசகம் வேண்டுமா? தமிழனுக்கு கிடைத்த ஒரு நல்ல செருப்படி. இதுவே இந்த ஆண்டின் மிக சிறந்த வாசகமென்றே சொல்லலாம். எந்த ஒரு தமிழனும் இந்த வாசகத்தை உணரவில்லை என்றல் அவன் தமிழ் மண்ணில் பிறந்தது வினே என்றே சொல்லலாம். இந்த வாசகத்தை மக்களுக்கு பரப்பிய ஒரு நல்ல தமிழனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
மெய்யர் சரவணன் - காரைக்குடிதமிழ்நாடு,இந்தியா
2010-10-17 07:45:41 IST
இலவசம் , இலவசம் எங்கு பார்த்தாலும் ஒரே நீண்ட வரிசை காரணம் அரசு, ஒரு இலவச திட்டத்திற்கு ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யும் அரசு ஏன் 25 கிமீ தொலைவிற்கு ஒரு தொழில்சாலை கட்டி வீட்டிற்கு ஒருவருக்கு வேலை ஏன் கொடுக்ககூடாது அப்படி கொடுத்தால் அனைவரையும் இலவசம் என்ற தீராத வியாதி இருந்து மீட்கலாம் !!! இப்படியே சென்றால் இந்தியாவை மட்டுமன்றி பாகிஸ்தானையும் சேர்த்து மீண்டும் வெள்ளையரிடம் அடகு வைக்க வேன்ன்டியதுதான்...
mano - india,இந்தியா
2010-10-17 06:50:44 IST
இலவசம் உள்ள நாடு பிட்சைகார நாடு ,இலவசம் இல்லா நாடு வல்லரசு நாடு இலவசம் வேண்டும் கல்வி மட்டும்...
கே.Ramamoorthy - pondicherry,இந்தியா
2010-10-17 06:48:30 IST
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு எவன் ஒருவன் கஞ்சனா இருக்கானோ அவன் தன் வாழ்க்கையை கொள்ளை அடிக்கிறான் எவன் ஒருவன் ஊதாரியாய் செலவு செய்கிறானோ அவன் தன் வாரிசுகளை கொள்ளை அடிக்கிறான். இதில் தி மு க யார் ?...
கே.விஜிகுமார் - villupuram,இந்தியா
2010-10-17 05:54:45 IST
இங்கே பிரச்சனை திசை திருப்பபடுகிறது. இலவசம் என்ற பெயரில் நடக்கும் விஞ்ஞான ஊழலை பற்றி அல்லவா எல்லோரும் எழுதவேண்டும்? ஒரு ரூபாய்க்கு அரிசி என்றால், மக்களுக்கு மட்டும் அது போய் சேரவேண்டும். அந்த அரிசி எப்படி வெளி மாநிலம் ஏன் வெளிநாடுகளுக்கு செல்லுகிறது? இப்படி தான் ஒவ்வொரு இலவச திட்டத்திற்கு உள்ளே பெரிய பிளான் இருக்கிறது. அதை தடுக்க எதிர் கட்சிகள் முயல வேண்டும். இலவசம் அந்தந்த மக்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் திட்டங்களின் பலன் அரசியல்வாதிக்கு கட்டாயம் சென்றடைய கூடாது....
சங்கர்சங்கர்கணேஷ் - PUNE,இந்தியா
2010-10-17 04:21:01 IST
GOOD .ILAVASAM...
சரவணன் - abudhabi,இந்தியா
2010-10-17 02:11:17 IST
ஒரு ரூபாய்க்கு அரிசியை கொடுத்துப்புட்டு அதை பேளுவதர்க்கு கழிப்பறை கட்டணம் மூணு ரூபாய் வாங்குறான் பரதேசி .... ............
ராஜ் - US,யூ.எஸ்.ஏ
2010-10-17 01:44:08 IST
மிக தெளிவான கருத்துகள். உழைபவர்களுக்கு சலுகை இல்லை. ஆனால் உண்டு உறங்குபவர்களுக்கு ஆயிரம் சலுகைகள். தனி மனிதனால் பெற முடிபவைகள் (டிவி, சைக்கிள்,.. ) அரசாங்கம் செய்ய கூடாது. அத்யாவசியங்களுக்கு வட்டி குறைந்த கடன் கொடுக்கலாம். அரசாங்கம் கல்வி, காவல், குடி நீர், மருத்துவம், சாலை, ஆகியவைகளில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்....
சுப்ரமணியன்.n - mumbai,இந்தியா
2010-10-17 01:15:11 IST
i support the notice distributer, we are all thinking and speaking with our friends and neighbors about this mater since long, but, That true tamilan has entered on the filed. I kindly request the tamilnadu govt staff . pl you dont support the d.m.k.party. If they got one more chance to rule tamil nadu , the karuna's family member will surely destroy the state....
ராஜ்குமார் - வொர்ரி,நைஜீரியா
2010-10-16 23:50:56 IST
கவிதா அவர்களே, உங்கள் karunanethi குடுக்கும் இலவசத்தை வாங்கவில்லை என்றால் அந்த காசு அவர்களே எடுத்து கொள்ளுவார்கள். அதுக்குதான் எல்லாரும் வாங்குகிறார்கள். நம்ம காச வங்கி நமக்கே குடுக்கும் இந்த அரசு தேவையா நமக்கு...
ஜெயகுமார் SAMBANTHAM - Houston,யூ.எஸ்.ஏ
2010-10-16 23:30:24 IST
Ayya un manasatchikku en veera wanakkam. intha ennam nammai pola pala tamilanukku endru thondrukiratho andru namakku nall valkkai. indha unmaiai ulaham muluvathum eduthu chendra DINAMALAR KU NANDRI....
vimal - tirupur,இந்தியா
2010-10-16 23:23:58 IST
நமக்கு தேவை ஒரே ஒரு இலவசம் தான். அது கல்வி மட்டுமே. எந்த ஒரு அரசியல்வாதி இதை தைரியமாக மக்களிடம் சொல்லி ஒட்டு கேட்கிறானோ அவனே உண்மையான மக்கள் பிரதிநிதி. super balamurugan உங்கள் varthai marukamudiyatha unmai ....
karthik - UAE,இந்தியா
2010-10-16 23:23:00 IST
ஒரு உண்மையான கருத்து மக்கள் இதை படித்து உணர வேண்டும்...
சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா
2010-10-16 22:49:09 IST
மக்கள் சொரணையற்றுப்போய் மாமாங்கமாகி விட்டது... ஒருவேளை அப்படியும் திருந்தி இலவசங்களை வாங்காமல் நிறுத்தி விட்டார்கள் என வைத்துக்கொள்வோம்.. இப்போ கலக்கம் ஓட்டின் விலையை உயர்த்தும்... மக்கள் தங்களையே விற்று ரொம்ப நாளாகிவிட்டது...? நம் நாட்டின் தற்போதைய தேவை ஒரு தேசப்பற்று மிக்க சர்வாதிகாரி......
aravind - chennai,இந்தியா
2010-10-16 22:38:21 IST
எது இலவசம், நமது (பொருட்கள் வாங்குபவர் உட்பட) காசை எடுத்து சிலருக்கு கொடுப்பது எப்படி இலவசமாகும். பொருட்கள் வாங்கி, மக்களுக்கு தருவதில் வரும் பணம் (கையுட்டு ),அவர்களுக்கு இலவசம் . பேரனுக்கு கேபிள் இணைப்பு மார்க்கெட்டிங் செலவு இலவசம் , காஸ் agency வைத்திருக்கும் வேண்டபட்டவருக்கு மார்க்கெட்டிங் செலவும் இலவசம். ஆகவே எல்லாருக்கும் எல்லாமும் இலவசம் ஒரு மாயை....
நாகராஜன் மூன்றடைப்பு திருநெல்வேலி. - தமிழ்நாடு.இநதியா,இந்தியா
2010-10-16 22:21:26 IST
இந்த இலவசங்கள் என்றைக்கு ஒழிகிறதோ அன்றைக்கு தான் நாடு உருப்படும்....
venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 22:21:16 IST
மிக நல்ல முயற்சி! இந்த இலவசம் இன்றைக்கு ஆரம்பித்த விஷயம் அல்லவே. தொன்று தொட்டு முன்னால் முதல்வர் MGR அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு அதே தொடர் கதை ஆகிவிட்டது. மக்களுக்கு விழிபுண்ணர்வு வர வேண்டும். வராத வரை அவர்கள் மாக்களாகவே இருப்பர்....
Malai - Madurai,இந்தியா
2010-10-16 22:12:37 IST
Thanks to dinamalar for publishing this type of Information and creating awareness among our Tamilians...
செந்தில்குமார் - துபாய்,இந்தியா
2010-10-16 22:11:14 IST
இது ஒரு தனி மனிதனின் ஆதங்கம் அல்ல. ஒட்டுமொத்த தமிழனின் குரலும்கூட....
Devakumar - Kadatchapuram,இந்தியா
2010-10-16 21:47:51 IST
இதே கருத்தை இந்த வாசகர் கருத்து பகுதியில் வாசகர் ஒருவர் கொஞ்ச நாளைக்கு முன்னால எழுதியிருந்தாரு..ஞாபகமிருக்கிறதா? Anyway..நல்ல கருத்து.....
ரவிக்குமார்.b - KARAIKAL,இந்தியா
2010-10-16 21:45:31 IST
நான் வெகு நாட்களாக நினைத்து இருந்ததை ஒரு தமிழன் அழகாக எழுதியதை வரவேற்கிறேன். என்று இலவசத்தை மறந்து உழைப்பை நம்புகிறானோ அன்று தான் தமிழன் வாழ்வில் உயரமுடியும். சபாஷ் தமிழா.......
தி.துரைராஜன் - புஜைராஹ்ஐகியஅரபுஎமிரேட்ஸ்,இந்தியா
2010-10-16 21:36:04 IST
நல்ல முயற்சி ஆனால் இதை படித்து உணரும் நிலை இன்னும நம் தமிழனுக்கு உள்ளதா?...
வீரன் - ஈரோடு,இந்தியா
2010-10-16 21:25:36 IST
தமிழா ...கொஞ்சம் பொறுத்துக்கோ ...அடுத்த அறிவிப்பு அட்டகாசமான அறிவிப்பாக வரும்.ஒவ்வொரு நகராட்சியிலும் இலவச சிகப்பு விளக்கு ஏரியா. வேலையில்லாதவனுக்கு உதவித்தொகை, கல்யானமாகாதவனுக்கு? அதனால சிவப்பு விளக்கு ஏரியா.வழக்கம்போல குத்தகை கட்சிகாரர்களுக்கு....
மணி - சிங்கபூர்,இந்தியா
2010-10-16 21:22:38 IST
அன்பரின் சீரிய முயற்சிக்கு ஆதரவு பெருகட்டும்....
ரவிக்குமார்.b - KARAIKAL,இந்தியா
2010-10-16 21:12:08 IST
வரவேற்கபடவேண்டிய விஷயம் தான். இன்றைய தமிழ்நாடு நிலைமை அப்படிதான் இருக்கிறது. சிந்திப்போம் செயல் படுவோம். இல்லையெனில் நமது சந்ததியினர் பிச்சை எடுக்க வேண்டும். திருடர்கள் உலா வருவர் பிற்காலத்தில்....
manoharan - kumbakonam,இந்தியா
2010-10-16 20:56:50 IST
elavasaththai muthalil konduvanththu M.G.R. pasi,pttini entral ennaventru theriuma uggalukku velinattil samparikka sentravarhale neengal sampaththa pla latcaggalukku varumanavari kattiyadhu unnda ithil engirundhu vanthathu ungal viyavai ..........mano...kmu.....tamilnadu....
மீரான் - hightstownNJ,யூ.எஸ்.ஏ
2010-10-16 20:52:02 IST
அய்யா, குடம் தண்ணி எடுத்து செல்லும்போது சிந்தும் நீர் போன்றது இந்த இலவசம். உனக்கே இவ்வளவு இலவசம் என்றால் கொடுக்கும் வர்க்கத்துக்கு எவ்வளவு கிடைக்கும்! என் இன்னிய தமிழா இனியாவது விளித்திரு. இதயம் நோகும் உடன்பிறப்பு மீரான்...
சண்முகம் - சிங்கப்பூர்ஜூரோங்வெஸ்ட்,இந்தியா
2010-10-16 20:40:09 IST
நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்ட தமிழனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழனே விளித்து எழு. இலவசத்தை நம்பி உன்னையும் உன் வம்சத்தையும் சோம்பேறியாகிடதே. வருங்காலத்தை நினைத்து உழைத்து வாழ வாழ்த்துகிறேன்....
முஹம்மது - தஞ்சாவூர்,இந்தியா
2010-10-16 20:33:06 IST
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் இலவசமாக எல்லோரும் வாங்கினார்களே அப்ப எங்கே போனது இந்த மனசாட்சிகள். உனக்கு வேண்டாம் என்றால் விட்டுவிடு , இல்லாதவர்கள் வாங்கி கொள்ளட்டும்...
சைவம்ஹரிஷ் - singapore,இந்தியா
2010-10-16 20:30:31 IST
எல்லாம் இலவசமாக வழங்கி, கடைசியில் மனைவி இலவசம் குழந்தை இலவசம் என்று சொன்னால் கூட ஆச்சர்ய படுவதற்கு இல்லை....
ஜான் ச்ரிச்டோபர் - திருநெல்வேலி,இந்தியா
2010-10-16 20:26:37 IST
நன்றாக சொன்னீர்கள் நண்பர்களே! என்று தான் நமது இனம் விளிப்படைய போகின்றதோ தெரியவில்லை. நண்பர்களே நன்றாக கவனியுங்கள், நமது இனம் ஏமாற்ற படுகின்றது அதிகாரத்தில் உள்ளவர்களால். நமது இனம் அழிய சென்ட்ரல் அண்ட் மாநில சர்க்காரும் சேர்ந்து சதி திட்டம் செய்கின்றது. நாம் வருகின்ற தேர்தலில் ஒரு பாடம் புகட்ட வேண்டும். மறந்து விடாதீர்கள். சாதி மதம் என்று பாராமல் நல்ல மனிதர்களுக்கே ஒட்டு போடுங்கள். நமது இனம் எங்கிருந்தாலும் வாழவேண்டும். நான் ஒரு தமிழன் மேலும் பல நாடுகளில் வேலைபார்த்தவன், எனை போன்றவற்றுக்கு நன்றாகத் தெரியும் தமிழன் படும் கஷ்டம். அவர்கல் அனுபவிக்கும் துன்பம் துயரும், எனவே இந்தமுறை காங்கிரசோ திமுகவோ அதிமுக வோ வராமல் பார்த்து கொள்ளுங்கள். இல்லையேல் நமது தமிழினம் வெகு விரைவில் அழிந்துவிடும்...
anbalagan.m - saudiarabia,இந்தியா
2010-10-16 20:22:27 IST
hatsoff to the people who done this....
k .seenivasan - Kovilpatti,இந்தியா
2010-10-16 20:22:20 IST
இலவசத்தை ஒழிப்பது நல்லது !!! நம்மை சோம்பேறிகளாக மாற்றுகிறது......
Ramesh - Oman,இந்தியா
2010-10-16 20:13:43 IST
நண்பா என்ன ஒரு நல்ல கருத்து. தமிழனம் அழிவதற்கு இலவசம் ஒரு முக்கிய காரணம் ஆகிவிடும் , இலவசம் வேண்டாம். இளைஞர்களே விளித்துகொள்ளுங்கள்...
சித்ரா dhinagaran - chennai,இந்தியா
2010-10-16 20:11:23 IST
வெரி வெரி வெல் நியூஸ்....
ரமேஷ் - tamilnadu,இந்தியா
2010-10-16 20:05:13 IST
நண்பன் செந்தில் அவர்களுக்கு, அரசாங்கம் எதற்கு கொடுக்க வேண்டும் ஒரு ருபாய் அரிசி மற்றும் தொலைகாட்சி. அதற்கு அனைவர்க்கும் வேலை உருவாக்கட்டும். அவர்கள் விரும்பியதை வாங்குவார்கள். நான் எப்பொழுதும் இதை பற்றி என் நண்பர்களோடு விவாதிப்பேன். அனைத்தும் எங்கள் மனதில் தோன்றியவை. எதற்கு கொடுக்க வேண்டும் இலவசம். அனைவரும் உழைத்து வளரட்டும். முயற்சி எடுத்த தமிழனுக்கு வணங்குகிறேன் ....
ram - chennai,இந்தியா
2010-10-16 20:01:24 IST
சரியான தலைப்பு. என் இன தமிழ் மக்களே, தயவுசெய்து விழிதிடுங்கள் .,.,வாழ்க தமிழகம்...
செல்வராஜ் - mandavadi,இந்தியா
2010-10-16 19:59:36 IST
"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை?...
பரந்தாமன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-10-16 19:59:01 IST
ரொம்ப அருமையான முயற்சி. என்னோட பாராட்டுகள். பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி வேண்டும்....
marengo - chennai,இந்தியா
2010-10-16 19:30:01 IST
நோட்டீசை இலவசமாக கொடுத்ததால் பரபரப்போ?...
பெரியார் - சென்னை,இந்தியா
2010-10-16 18:56:02 IST
கொத்தடிமைகளை உருவாக்கும் அரசியல் வியாதிகள் வாழ்க...
bharani - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 18:55:01 IST
திமுக அரசே மக்களை எமற்றதே. பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். அது உங்கள் விசயத்தில் உண்மையாக போகிறது. மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை கொடுங்க அது மட்டும் போதும்....
najimu - kl,மலேஷியா
2010-10-16 18:47:52 IST
சாக்கடையை சுத்தம் பண்ணுஙணகப்பா என் வாழ்துக்கள்...
தமிழன் - நாக்பூர்,இந்தியா
2010-10-16 18:40:14 IST
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே... இது ஒரு மேலாண்மை இப்படியே ஓசி கொடுத்து பழக்கபடுத்திட்டா இனி ஏழேழு தலைமுறையும் கலைஞரும் அவர் வாரிசும் அரியணையில் ஆள்வார்கள் அல்லவா.....
அப்பாச்சி ராஜா அண்ட் கார்த்தி - kansas,யூ.எஸ்.ஏ
2010-10-16 18:21:06 IST
தமிழா...இந்த இலவசம் எல்லாம் உழைக்கும் மக்களின் வரி பணம் ..இதே நிலை தொடர்ந்தால் உழைக்கும் மக்கள் சோர்வடைவர்கள்...முடிவு????? இந்தியவில் தமிழ்நாடு ஒரு சோமாலியா ஆகும்......
kmkvel - chidambaram,இந்தியா
2010-10-16 17:42:42 IST
மதிப்பிற்குரிய நண்பர் தன்மான தமிழன் ஒருவர் இருப்பதில் பெருமை அடைகிறேன். தமிழகம் எப்பொழுது விடியும். தமிழகம் எப்போழுது காப்பற்றபடும். தமிழகம் எப்போழுது விடுதலை ஆவும். எல்லாம் கொள்ளை போகுது. தன்மான தமிழர்கள விளித்திடிங்கள். போதும் நாம் அமைதியாக இருந்தது...
C . மரியதாஸ் - மேல்புறம்,இந்தியா
2010-10-16 17:42:36 IST
இலவசம் வேண்டாம்! எந்த அரசியல் கட்சிகளும்! இலவசம் என்ற பேரில் எதுவும மக்களுக்கு கொடுக்கக்கூடாது! தற்போது கொடுப்பதெல்லாம் ஏழைகளின் உழைப்பில் ஏழை அல்லாதோரும் இலவசமாய் அனுபவிக்கிறார்கள். எத்தனையோ கை, கால், மற்றும் உடலால் ஊனம் உடையோர் இதற்கு அருகதை இல்லாதோராய் இருக்கிறார்கள்! ஏன்? ஏழை மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள்? விலை வாசியை பெருக்குகிறார்கள்! விளிதெளுவீர்களா? இந்திய மக்களே!...
senthil - dubai,உகான்டா
2010-10-16 17:39:13 IST
எவன் இலவசம் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்பவன்(...
karthikeyan - India,இந்தியா
2010-10-16 17:31:28 IST
nice comments........we people always good in comments.....sitting in dubai,aus,us etc and commenting is very easy come and feel in tamilnadu then we realise y we people going towards free....
A.Jegadeesan - Mathurai,இந்தியா
2010-10-16 17:27:14 IST
இலவசங்களில் தடுமாறும் தமிழகம், எங்கு அடுத்த இலவசத்தை பெறுவது என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும இன்னேரத்தில் இப்படி ஒரு பிட் நோட்டீஸ் சுற்ற விட்டது உடன்பிறப்புக்களை நோகச் செய்வது அடுக்குமோ. இலவசமாக நிலாவிற்க்கு புறப்பட தயாறாக தமிழன் காத்திருக்கையில் இப்படி ஒரு சோதனையா அ.ஜெகதீசன் மதுரை...
sundar - Chennai,இந்தியா
2010-10-16 17:27:02 IST
This is excellent.Earlier it was circulated over internet.With the advent of DMK,freebies culture with the sole aim of winning the elections has just taken over.Now money power and muscle power alone decide everything unless GOD ordains to set right things with a massive catastrophe.A majority of people are refusing to think being brainwahsed by Kazhagam's dangerous policies of leading the country to bankruptcy...
Manickavachagan - டார்எஸ்சலம்,தான்சானியா
2010-10-16 17:08:59 IST
வரவேற்கிறேன் இந்த எண்ணம் இருப்பின் தமிழ்நாடு நிச்சயம் உருப்படும். இலவசங்களால் மக்கள் சீரழிந்து போவது உறுதி. நாளைய சந்ததிக்கு நாம் என்ன விட்டுப்போகிறோம் என்ற எண்ணம் வரவேண்டாமா? மஞ்சள் துண்டுக்கும் அவர் சந்ததியருக்கும், உடம் பிறப்புகளுக்கும் இன்னும் மூன்று தலைமுறை உட்கார்ந்து சாப்பிட ஏற்பாடாகி விட்டது. ஆனால் பெரியவருக்கு இன்னும் ஆசை நின்ற பாடில்லை! தமிழை வைத்து அவர்கள் பிழைதுக்கொண்டார்கள் நீ தெருவில் நிற்கிறாய்!...
பொன் சரவணன் - தேனீ,இந்தியா
2010-10-16 17:08:17 IST
தமிழ் நாட்டில் இருக்கிற இரண்டு முன்னேற்ற கட்சிகளும் அழிந்தால் தான் தமிழ் நாடு முன்னேறும்.. அது வரை இப்படித்தான்......
THAINES - karaikudi,இந்தியா
2010-10-16 17:04:34 IST
இந்த நோட்டிசை வெளியிட்டவருக்கு என் அன்பான இதயம் கனிந்த வாழ்த்துக்கள். தமிழன் என்று இலவசத்தை வாங்காமல் உழைத்து சம்பாதித்து வாழ்க்கை நடத்துகிரானோ அன்றுதான் தமிழன் உருப்புட்டுவான். இலவசத்தை கொடுத்து ஒட்டு வாங்கும் எந்த அரசாங்கமா இருந்தாலும் நீதி நெறி கெட்ட அரசாங்கமே. தமிழா இனியாவது முளித்துக்கொள். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த தினமலர்க்கு நன்றி .வாழ்க தமிழன் ஒழிக இலவசம் ....
Mohan - Singapore,இந்தியா
2010-10-16 17:03:04 IST
இலவசத்தை ஒழிப்பது நல்லது !!!அந்த நல்ல நண்பர்களின் சேவையில் நானும் பங்கு கொள்ள விரும்புகிறேன்.அவர்களுக்கு என் முழு ஆதரவினை தெரிவித்து கொள்கிறேன் . இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா.....ஆதரவு நல்கிடு... shanece2005@gmail.com...
பிரியா - Delihi,இந்தியா
2010-10-16 17:00:56 IST
இலவசத்தை ஒழிப்பது நல்லது!!! இலவச அரசு வேண்டாம் எங்களுக்கு......
மாப்பிள்ளை - சென்னை,இந்தியா
2010-10-16 16:52:28 IST
மகனே நீ என் இனமாடா. இந்த நோட்டீசை தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும், நகரத்திற்கும் அனுப்பி வையடா....
எல்.தக்ஷிணாமூர்த்தி,துபாய் - chennai,இந்தியா
2010-10-16 16:49:36 IST
நண்பா உன்னைப்போல் ஒருவன் நாட்டுக்கு தேவை. நீ வாழ்க மனிதன் சோம்பேறியாகுவதற்கு காரணம் திமுக தான்...
ராஜா - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 16:45:44 IST
உண்மையில் வரவேற்க வேண்டிய ஒன்று. தமிழன் இலவசத்திடம் வசம் ஆவதற்குள் விழிக்க செய்ய வேண்டும்....
அன்பரசன் - தஞ்சாவூர்சவுதிஅரேபியா,இந்தியா
2010-10-16 16:36:59 IST
இலவசம் என்பதில் தவறு இல்லை. அது சமுகத்தில் கீழ் நிலையில் உள்ள மக்களுக்கு செல்லாமல், எல்லா வசதி உள்ளவர்களுக்கும் செல்கிறது. அதனை தடுத்தால் இலவசம் பயன் கொடுக்கும் . உண்மையில் ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்படும் எவனும் இலவசத்தை குறை சொல்ல மாட்டான்....
மொக்கை - மதுரை,இந்தியா
2010-10-16 16:31:31 IST
இலவசமா கிடைக்கிற பொருளைவிட இலவசம் குடுக்கிற ஆளோட நோக்கத்தை முதல்ல பார்க்கணும் அப்பு..காமராஜர் மதிய உணவு போட்டார்னா அதுக்கு காரணம் புள்ளைக குறைந்தபட்சம் பள்ளிக்கூடத்துக்கு வரட்டுமேன்னுதான்..அது ஒரு உதவி.. அதை வச்சு ஓட்டு வாங்குறதெல்லாம் அந்த சுயநலமில்லாத மனுசனோட நோக்கமா இருந்ததில்லை..ஆனா இப்போ இலவசம் குடுக்கிற ஆளையும் பாருங்க..சுயநலத்தோட மொத்த உருவம்..இவரு குடுக்கிற இலவசம் ஓட்டுக்கு குடுக்கிற கையூட்டு.. ஆதாயமில்லாம யாராவது கையூட்டு குடுப்பாங்களா? கொஞ்சத்தை குடுத்துட்டு மொத்தத்தையும் ஆட்டைய போடுறதுதான் இவுங்களோட நோக்கம்..பத்து ரூபாய் கீழே கிடைக்குதுன்னு அதை எடுக்க குனிஞ்சா பின்னாடி ஆயிரம் ரூபாய் வச்சிருந்த பர்ஸ் காணாம போயிருக்கும்..அந்த பத்து ரூபாய்க்கும் இப்போ கிடைக்கிற இலவசத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.....
மேதாவி - Chennai,இந்தியா
2010-10-16 16:28:41 IST
உண்மையிலே வேலைக்கு ஆள் கிடைப்பது மிக கடினமாக உள்ளது. திருப்பூர் என்ற நகரங்களில் நேபாளத்திலிருந்தும் , பீகாரிலிருந்தும் ஆட்களை கொண்டு வருகிறார்கள். தமிழ் நாட்டு தொழிலாளிகள் வேலைக்கு வருவதில்லை . எனெற்றால் ரூபாயிக்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கிறது. ஒரு நாளுக்கு வேலை செய்கிறார்கள். இந்த அரிசியை வாங்கி தின்றுவிட்டு வீட்டிலே உறங்குகின்றனர். கலர் டிவி பார்கின்றனர். இதை ஏன் கருணாநிதி செய்கிறார் என சிந்திக்க வேண்டும். கருணாநிதிக்கு இவ்வளவு பிள்ளைகளும் , பெண்ணும் அரசியலில் இல்லை என்றால் , இதையெல்லாம் (அவர் எதிர் காலத்திற்காக) செய்வாரா?...
tamilkumaran - chennai,இந்தியா
2010-10-16 16:23:11 IST
the matter is entirely differ , but the voices from all over the world makes me laugh. They are settled are stayed well in UK,Canada and US , let them tell that there is no such kind of things to their own citizens ? All these developed countries have given a lot of renumeration / aid / monthly allowances to their homeless citizens / Senior Citizens / orphans as well as un employed youth. What they then tell about these kind of services by a Government to their own people ? even in the much developed nations. Well, these Tamil Culture is entirely different they only shout while in foreign places. Well, am not DMK or AIADMK too [ they both started the free mania to tamils ]. Fed up on seeing the comments from the abroad tamilargal....
ர.ஸ்ரீனிவாசன் - chennai,இந்தியா
2010-10-16 16:22:17 IST
மிகவும் வரவேற்க வேண்டிய ஒரு சிறப்பான நோட்டீஸ். பெயரை வெளியிட முடியாத நிலை என்பதால் சொல்லப்பட்டுள்ள கருத்தை குறைத்து மதிப்பிட முடியாது தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் ஜைஹிந்த்...
சண்முகம் - தமிழ்நாடு,இந்தியா
2010-10-16 16:19:15 IST
இந்த சலுகைகளின் மதிப்பும் தேவையும் எல்லாம் இருக்கும். நமக்கு தெரியாது, ஒரு உண்மையான ஏழையின் தேவை, அவனும் அவன் வீட்டில் டிவி, காஸ் போன்ற பொருட்களை பயன் படுத்த முடியம் என்ற கனவு இதனால் நினைவாகயுள்ளது. இன்றைக்கு விற்கும் விலைவாசிகளினால் நன்றாக சம்பாதிக்கும் பலராலும் குடும்பம் நடத்துவது கஷ்டமான நிலையில், சாதாரண மனிதனால் என்ன பண்ண முடியும். செந்தில் சொன்னதுபோல் எதுவும் இலவசம் கிடயாது. "அரசு" இந்த சலுகைகள் அனைத்தும் சரியான நபருக்கு செல்கிறதா என்று கவனிக்க வேண்டும். இதை நாமும் உணர்ந்து இதற்கு தகுதியானவரா என்று யோசித்து பெறவேண்டும்....
vijayakumar - dubai,இந்தியா
2010-10-16 16:16:36 IST
இந்த நோட்டீஸ் அச்சடித்த தமிழனுக்கு (நண்பனுக்கு) என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.இனிமேல் ஆவது மக்கள் திருந்த வேண்டும் என்ற சிறிய சிந்தையுடன் துபாய்ல் இருந்து நயத்தான்பட்டி விஜயகுமார்....
senthil - lucknow,இந்தியா
2010-10-16 16:12:03 IST
weldone tamila you give to answer comming election...
மேதாவி - Chennai,இந்தியா
2010-10-16 16:11:59 IST
இலவச விஸ்கி , இலவச பிராந்தி , இலவச சாராயம் இவற்றைஎல்லாம் கொடுக்காமல் விட்டார்களே . நல்ல வேளை....
தமிழ் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-10-16 16:08:47 IST
இலவசம் என்பது பல வளர்ந்த நாட்லயும் உள்ளது. லண்டன்-ல் (UK/Europe) அரசு பெனிபிட் வாங்காதவர்கள் உள்ளார்களா? (Except from work permit guys, even they are getting free education & fee medical treatments ). Is anyone disagree with my statement? At the same time, I don't agree giving TV as free-bee in Tamilnadu. UK government provides (weekly 20pounds) money for each children up to 17 years. Education & Medical is free for everyone including foreigners. If you are unemployed, then govt provides job allowance (it is around 100 pounds per week). For each child, govt deposits 500 in theirs account. This is just few only, go and search google UK benefits to know more details. Even Singapore govt also provides some benefit for their citizens. You will get lump sum amount if you give birth 2nd/ 3rd children's within the age of 28 and govt provides housing for low income people. Of course, Indians won't get anything. This is only for Spore Citizen. Please search in google for Singapore Citizen benefits before post a comment. Same like, all the countries provides some benefits to their citizens. Indian Citizens living in abroad won't get anything (or will get only few benefits) because we are not citizens of their country. Rice for Rs.1 is good scheme and only poor people are buying it. If you are poor, then you will understand. And don't blame free school lunch meal scheme. Medical Insurance scheme is good one as well. Free gas stove good scheme to reduce environment pollution and improve the ladies living standard. Unemployment benefit is a good as well and all developed countries giving some benefits to unemployed people....
இந்தியன் - Thamizhnadu,இந்தியா
2010-10-16 16:04:57 IST
உன் நண்பனை காட்டு! நான் உன்னை அடையாளம் கண்டுகொள்வேன்! அனைவரும் ஒரே குரலில் சொன்னால் தவறு சரி ஆகிவிடாது! இவர்கள் கூறுவது அத்தனையும் சரியாக இருந்திருக்கும்.....! தமிழகத்தில் இன்றும் உணவு உறைவிடம் இல்லாதோர் லட்சகணக்கில் உண்டு. இவர்களை காக்க முன்நேற்ற துண்டு பிரசுரம் அடித்திருந்தால்... குரல் கொடுத்திருந்தால்......
சண்முகம் - குவைத்,இந்தியா
2010-10-16 15:55:36 IST
என் அருமை சகோதரருக்கு நன்றி. நான் நினைத்ததை அவரும் நினைத்துள்ளார். பாவம், என் விவசாய மக்கள் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் டெய்லி சாகின்றனர். பாழா போன இலவசமும் + 100 நாள் வேலை வாய்ப்பும் நமது வருங்கால இந்தியாவின் பொருளாதாரத்தை கண்டிப்பாக அழித்து நம்மளை கை ஏந்த வைக்கும். 2 ஏக்கர் நிலம் வைத்திருப்பவனும் கரம்பா நிலத்த போடுறான். கடவுலே என் குல விவசாய காப்பாட்று...
அமானுல்லாஹ் - ரியாத்சவுதிஅரேபியா,இந்தியா
2010-10-16 15:54:48 IST
தமிழா இப்போதாவது விழித்துக்கொள்.. உழைப்பின் அருமை உணர்ந்து செயல்படு.. இலவச நெருப்பில் குளிர்காய்ந்துகொண்டிருக்கும் மக்களே தற்போது இலவசமாகக் கிடைத்துக்கொண்டிருக்கும் அனைத்தும் நமது வரிப்பணமே அல்லாமல் மஞ்சள்துண்டு தான் 'சேர்த்து வைத்த' சொத்திலிருந்து கொடுப்பவை அல்ல..'அடுத்தவீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே' என்று வாரி விட்டுக்கொண்டிருக்கிறார். கஜானா காலி ஆனால் இவருக்கென்ன? அடுத்து வரும் அரசு கண்டிப்பாக (திமுக வே வந்தாலும்) உழைப்பவனின் தலையில்தான் கை வைக்கும். அதற்கும் தயாராயிரு.....
மு.க.மண்டு - திருவாரூர்,இந்தியா
2010-10-16 15:48:30 IST
வாசகர்களே நமக்கு எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சையாகவே தெரியும்...அவர்கள் ஆட்சி காலத்தில் என்ன சாதிச்சோம்?வேலை வாய்ப்பு குறைவு...அதே வேலை வாய்ப்பு அப்போது தொநூறு சதம் பெட்டி கொடுத்தே வாங்க இருந்தது..இப்போது நல்லதோ கெட்டதோ ஓசில டிவி அடுப்பு பிரியாணி 500 ரூவ நோட்டு கிடைக்குது.அதுக்கு இதுவே மேல்.ரெண்டுமே நாட்டை முனேற்றும் கட்சிகள் அல்ல...ஆனால் எப்படி பார்த்தாலும் எதுமே செயாமல் வாய் வார்த்தை கூறி நாடகம் நிறைய நடிக்கும் நாதாரியை விட இலவசம் ங்கற பேர்ல குடுக்குற சொமாறியே மேல் (நம்ம மக்களோட காசுப்பா..எவனும் கை காசு போட்டு வாங்கி குடுக்கல...) கொடுக்குரவண விட வெறும் வாய் வார்த்தை பேசி பெட்டி ஒன்றே பிழைப்பு என்றும் மேலும் அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு லஞ்சம் வாங்க முழு சுததிரம் கொடுக்கும் இந்த வர துடிப்பவரா பெரிய ஆச்சி?படித்த மனிதனாக யோசியுங்கள்.கண்டிப்பாக ஏதும் செய்ய போவதில்லை நாட்டு மக்கள் என்று இதற்க்கு மேல்..அவர்களுக்கு அரசியல் கச்சி இருக்குற பிரச்சனையில் இதெல்லாம் அவர்களுக்கு யோசிசி பகக்வோ இல்லை நடைமுறை சாத்தியமோ இந்த ரெண்டு திராவிட கலகங்கள் இருக்கவரை இல்லை...திருந்துனா திருந்துங்க இல்லேன எக்கேடோ கேட்டு போங்கப்பா..உளதா சொல்லுறேனுங்க.......
GG - singapore,இந்தியா
2010-10-16 15:43:49 IST
செந்தில் கூறியது முற்றிலும் சரியே! ஆனால் இந்த இலவசம் சரியான நபர்களுக்கு மட்டும் கிடைக்க வேண்டும். இந்த சல்லுகைகள் எல்லாம் வறுமை கோட்டிற்கு கீழ உள்ளவர்களுக்கு ஒரு போனஸ் மட்டுமே சம்பளம் இல்லை....
R.N.Swamy - Chennai,இந்தியா
2010-10-16 15:41:03 IST
Excellent handout. What is stated there is abslolutely true. I hope right-thinking and self-respecting people will take it seriously and agree with it....
இந்திரா ராஜேந்திரன் dubai - துவரங்குறிச்சிtrichy,இந்தியா
2010-10-16 15:36:16 IST
என்னடா உலகம் இது ப்ரீ கொடுத்தாலும் தப்பு. எதுவும் கொடுக்கலனாலும் தப்பு. இவர்களெல்லாம் எந்த கிரகத்திலிருந்து வந்தார்களோ தெரியவில்லை! தலிவா உன் பணி தொடரட்டும். தூற்றுவார் சிலர் உண்டு. உன்னை போற்றுவார் பலர் undu அதைப்பற்றி கவலை கொள்ள வேண்டாம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு .....அவர்களுக்கு காலம் பதில் sollum...
கட்டபொம்மன் - நெல்லை,இந்தியா
2010-10-16 15:35:59 IST
நல்ல கவிதை. ஆனால் யாரை அடுத்து தேர்ந்தெடுக்க ?? ADMK DMK same ! இவர் குடும்பத்தோடு கூத்தடிகிறார். ஆனால் அந்தம்மா சசி & co வோட கூத்தடிக்கும் !இரண்டுபேர் இல்லாத ஒரு புதிய கட்சி உண்டா ? !! ( காங்கிரஸ் வேஸ்ட் CWG மொத்தமா அடிச்சி வச்சு இருக்கானுக )...
வெங்கடேசன் - ஈராக்,இந்தியா
2010-10-16 15:32:16 IST
நிலை மாற வேண்டும்....
கண்ணன் - துபாய்,இந்தியா
2010-10-16 15:26:13 IST
நோட்டீஸ் அனுபிய நபருக்கு பாராட்டுக்கள்...
வைர செந்தில் - oman,இந்தியா
2010-10-16 15:16:27 IST
அய்யா, ரொம்ப ரொம்ப நல்ல கருத்து. நான் இப்போ தமிழ் நாட்டுக்கு போய் வந்தேன். எனது அருகாமையில் குடியிருக்கும் ஒரு நண்பர் அவருக்கு மனைவி மூன்று பிள்ளைகள். அவர் எந்த வேலைக்கும் போவது இல்லை. அவர் கூறிய கருத்தும் இதுதான். நான் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்து எனது வீட்டில் அனைத்து பொருளும் வாங்கி வைத்துள்ளேன். இதே போல் அவர் வீட்டிலும் அனைத்தும் உள்ளன. இலவசமாக. நான் கூனி குறுகி விட்டேன்...
VENKATRAMANAN - DOHA,இந்தியா
2010-10-16 15:13:50 IST
"Free"things to be eliminated for betterment of the country....
சங்கரலிங்கம் - துபாய்,இந்தியா
2010-10-16 15:01:41 IST
இலவசத்தை வெறுப்பவன் கவுரவமாக வாழ்கின்றான் என்று அர்த்தம். அதனால் மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். அரசியல்வாதிகள் இலவசமாக கொடுக்கும் பொருள்களை மக்கள் வெறுத்து ஒதுக்கினால் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. நோட்டீஸ் போட்டு விழிபுணர்வு ஏற்படுத்தும் அளவுக்கு மக்கள் மனம் பாழ் அடைந்து இருக்கிறது. தமிழன் தன கலாச்சாரத்தை இழ்ந்து கொண்டு இருகின்றான். தமிழ் தமிழ் தமிழ் என்கின்ற பெயரால்....
sbala - London,யுனைடெட் கிங்டம்
2010-10-16 14:56:05 IST
anything that you get free is stolen from someone who had worked for it. Anyone who gives anything free is an accomplice in the act. They either trade in stolen goods or steal from a good man. Both should be ashamed of themselves. One solution is to make it mandatory for these thieves to undergo sterilisation....
புகலேஸ்வரி சிவராமன் - dubai,இந்தியா
2010-10-16 14:45:34 IST
சரியான தகவல் விழித்திடு தமிழா, துங்குபவனை எழுப்பலாம் நடிப்பவனை என்ன செய்வது?...
kumar - madurai,இந்தியா
2010-10-16 14:40:23 IST
உழைப்பை நம்பு. இலவசம் எல்லாம் மோசடி தான். இலவசம் நம் தலையில் நாமே கல்லை தூக்கி போடுவது தான்...
shivaraman - dubai,இந்தியா
2010-10-16 14:37:47 IST
மனசாட்சி உள்ளவர்களுக்கு புரியும். இல்லாதவர்களுக்கு(இலவசமாக இழந்தவர்கள்) எப்படி? இலவசமாக எல்லாம் கொடுக்கும் அரசு ஒருவனுக்கு ஒரு உண்மையான வாழ்க்கை கொடுக்க முடியுமா?...
jabir - jeddah,சவுதி அரேபியா
2010-10-16 14:37:25 IST
இந்த மாதிரி இலவசத்தை கொடுத்து மக்களை கெடுத்து வைத்து இருக்கிறார்கலே என்று இரண்டு நாளைக்கு முன்தான் பேசிகொண்டு இருந்தோம் . இதுனால வேலைக்கு ஆள் கிடைப்பது ரொம்ப சிரமமாக இருக்கு " makkal சிந்திக்கணும்...
ப சர்வேஸ் - DUBAI,இந்தியா
2010-10-16 14:36:40 IST
தமிழா உன் மனசாட்சி சரியாகத்தான் சொல்லி உள்ளது. ஏனெனில் அது பணக்காரனின் அல்லது பணத்துக்காக சிந்திக்கும் மனசாட்சி அக இருக்கும். உண்மைகள் நீ ஒரு குப்பதுக்கோ அல்லது ஒரு சேரிகோ சென்று அங்கு உள்ள மக்களின் மனசாட்சி பற்றி கேட்டு பார். அது மக்களின் வரி பணத்தால் செலவிடப்படும நல திட்டங்களை லஞ்சம் அல்லது பிச்சை என்று கொச்சை படுத்தாது. ரோடு போட்டு காரில் சுற்ற வைப்பதும் நல திட்டம் தான். ஏழைக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி தருவதும் நல திட்டம் தான். முறையான மருத்துவம் பெறமுடியாமல் மரித்துபோகும் மக்களை பற்றி உன் மனசாட்சிக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. தேர்தல் வருவதால் உன் மனசாட்சி தவறாக சிந்திக்கிறது. இலவச கல்வி கற்று நாட்டுக்கு உழைக்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் காமராஜரை வாழ்த்தி கொண்டுதான் உள்ளது. மூன்று வேலை உணவில் ஒரு வேலை வயிறு முட்ட சோறு போட்ட புரட்சி தலைவரை எந்த ஏழையும் மறக்க வில்லை. சேலை வெட்டி thanthu ஏழையும் மானத்துடன் வாழ வைத்தவரும் புரட்சி தலைவரே அதுபோல் இன்று ஏழைக்கு செய்யும் எல்லாம் நல திட்டம் தான். ஊர் குளத்தில் குளித்து முடித்து ஈர புடவையுடன் ஒரு முனையை மரத்தில் கட்டி மறு பாதியை உடலில் சுற்றி வறுமையிலும் தன் மானம் காத்து நிற்கும் எங்குல தமிழ் தாயின் மனசாட்சி இடம் சென்று கேள் உனக்கு உண்மை விளங்கும் தேர்தல் வந்தால் மட்டும் ராமரையும், ஏழையையும் நினைத்து பார்க்கும் பதவி பிரியர்களே திருந்துங்கள். வறுமையில் வாழ்பவன் வாழ்த்துவன் உன்னையும் உன் மனசாட்சியையும்....
கண்ணன் - சென்னை,இந்தியா
2010-10-16 14:36:19 IST
இது எப்போவோ மெயில் ல வந்துவிட்டது .இப்பதான் போஸ்டர் அடிகிறனுங்க.இதல்லாம் பார்த்து நம்ம ஆளுங்க திருந்த மாட்டானுங்க . மிசா மாதிரி சட்டம் வந்தால் தான் ....
கணேஷ் - டாத,இந்தியா
2010-10-16 14:26:34 IST
அட நீங்க வேற, இப்படி எல்லாம் கமெண்ட்ஸ் எழுதினால் நாங்க திருந்திடுவோம? சும்ம்மா ஜோக் அடிக்காதிங்க எல்லோரும்...
SRIDHAR - Doha,கத்தார்
2010-10-16 14:24:57 IST
அது மட்டுமா தமிழகமே.... இத்தனையும் இலவசமாய் தந்திடில்.. நன்றிக் கடனாய் நாட்டுக்கு இன்னும் பல குடிமகன்களைப் பெற்றுத் தந்திடலாமல்லவா.... இன்னும் இலவசமாய் இரந்துண்ண பேதைகளைப் பெருக்கிடலாம்... என்ன செய்ய.... தமிழன் பாவம் இன்னும் தமிழனாய் மட்டுமே இருக்கிறான்... அவன் முதுகில் பயணிப்பவர்கள் "சிவாஜிகளாயும், உலகநாயகனாயும் இன்னும் பல கோடிகளின் உரிமையாளராகவும் ஆகிறார்கள்" இது புரிந்து கொள்ளாத தமிழன் எப்படி ஒரு புத்தியுள்ளவனாவான்... -இன்னனம் புலம் பெயர்ந்த ஒரு "தமிழன்"....
முருகேசன் - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 14:16:51 IST
இது ஒரு நல்ல கருத்து. ஒவ்வாரு தமிழனும் சிந்திக்க ஒரு சந்தர்ப்பம். தமிழா உழைத்தால் தான் ஊதியம் ....
pandiyan - SINGAPORE,இந்தியா
2010-10-16 14:16:22 IST
realy this is good message, pls this all message forward to D.M.K leader to KALINGER...
wisher - chennai,இந்தியா
2010-10-16 14:05:47 IST
i really appreciate the work done by that person. it feels great that atleast one has got the guts and mind to do so.. keep it up tamila.. but at the same time when i think of you i feel sad.whatever you do our tamilians will not retreat.. they still keep searching for free stuffs (Pichai ) from the govt.....
siva - singapore,இந்தியா
2010-10-16 13:54:44 IST
நன்றி நண்பா, இப்பதிப்பு இன்டர்நெட்டில் 6 மாத முன் வந்தது பார்த்தேன். அப்போது நினைத்தேன் இப்போது வந்தது. நன்றி நன்றி. இப்போது கட்டித் தொழிலாளர்கள் கூட தன் மானம் இழந்து நாகரிகமாக பிச்சை எடுக்கிறார்கள். காபி டீ சாப்பாடு தந்தால் தான் வேலைக்கு வருவேன் என்கின்றனர். செய்யவில்லையானால் திருடல். பொருள் சேதம் செய்தல் போன்றவை செய்கின்றனர். தெரியுமா அரசுக்கு, இலவசம் தான் DMK தோல்விக்கு காரணமாக போகிறது....
murali - மோரி,ஆஸ்திரேலியா
2010-10-16 13:44:06 IST
இது முற்றிலும் உண்மை .ஒருகால் அடுத்தமுறை ஆட்சிக்கு வருபவர்கள் இந்த இலவசத்தை நிறுத்தி விட்டால் .உண்மையில் அனைவரும் பிச்சைக்காரர்கள் தான்.மிகவும் பயனுள்ள விஷயம் .விழித்து கொள்வார்களா தமிழ் மக்கள் ?...
வெ. கண்ணதாசன் - ஈராக்,இந்தியா
2010-10-16 13:42:03 IST
மனம் குமுறும் தமிழனின் மகத்தான வார்த்தைகள். அனைத்தும் மானமுள்ள தமிழனுக்கு உரைத்திடும் காகித பேப்பர்களும் கருத்துள்ள வார்த்தைகளும். இந்த பணியை துவங்கிய நண்பர்களுக்கு மனமார்ந்த ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். தமிழன் தொன்மை பாரம்பரியம் மிக்கவன் ! தமிழன் வீரமிக்கவன் ! தமிழன் முற்போக்கு சிந்தனையுள்ளவன் ! தமிழன் பேரறிவாளன் ! தமிழன் தன்மானம் உள்ளவன் ! தமிழன் பெருமையும் பொறுமையும் மிக்கவன் ! நமக்கு வரலாறு இதைத்தான் கூறுகிறது. நீ வரலாறு படைக்காவிட்டாலும் வரலாறை அழிக்காதிரு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!...
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
2010-10-16 13:38:25 IST
இது இரண்டு மாதம்களுக்கு முன்னால் எனது மின் அஞ்சலில் வந்தது. இது ஒரு தமிழ் மகனின் மனசாட்சி மட்டும் இல்லை, பெரும் பான்மை தமிழ் மக்களின் மனசாட்சியே !!!...
விநாயக் - சென்னை,இந்தியா
2010-10-16 13:37:38 IST
வெரி குட், இந்த நியூஸ் எல்லோருக்கும் தான். உனக்கும், எனக்கும் தான், ப்ளீஸ் பின்பற்றுங்கள், நானும் பின்பற்றுகிreaன்...
manikandan - Madurai,இந்தியா
2010-10-16 13:37:00 IST
good news for tamil people...
யுவன் bharathi - nellai,இந்தியா
2010-10-16 13:36:54 IST
இந்த நோட்டிசை படைத்து கொடுத்தவருக்கு எனது மனதார்ந்த நன்றி!தொடரட்டும் உங்கள் சேவை....
அரபு தமிழன் - Manama,பஹ்ரைன்
2010-10-16 13:34:36 IST
என்ன செய்வது ? எல்லாவத்தையும் இலவசமாக தமிழ் மக்களுக்கு கலைஞர் அய்யா கொடுக்கும்படி வந்த நிலைமைக்கு யார் காரணம். இதுக்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் தமிழகத்தை கூறு போட்டு விட்டவர்கள்.தமிழ் மக்களுக்கு ஒன்றும் கிடைக்காதபடி கஜானாவையே காலி பண்ணி விட்டு ஹாயாக மலைக்கு போய்விட்டார்கள். அதனால் மக்களுக்கு ஏதோ கலைஞரால் பாமர மக்களுக்கு இலவசங்களை கொடுக்கிறார். மக்களும் சந்தோஷமாக இவைகளை பெறுகின்றனர். உங்களுக்கு தேவை இல்லைஎன்றால் யார் உங்களை வாங்குங்கள் என்று நிர்பந்தபடுத்துகிறார்கள். முதலில் இளைஞர்கள் கெட்டு போகிறதற்கு முதல் காரணமே சினிமா தான். அதை முதலில் ஒழித்தாலே தமிழகத்தில் உள்ள 95 % இளைஞர்கள். திருந்தியது போலதான்....
தமிழன் - சென்னை,இந்தியா
2010-10-16 13:33:14 IST
சும்மா கொடுத்தா உன்ன யாரு வாங்க சொன்னது. அது இயலாத ஏழைகளுக்கு உன்ன யாரும் சம்பாரிக்க வேண்டாம்னு சொன்னாங்களா. ஏன்டா நீங்களா சம்பாரிக்காம இருந்துட்டு அடுத்தவங்கள குறை சொல்லாத. முதல்ல நீ உருபடியா இருக்கியாநு பாரு. போய் சம்பாரிங்க. உன்னால முடிஞ்ச உதவிய நீயும் இயலாதவர்களுக்கு பண்ணு ............
நல்லவன் - Chennai,இந்தியா
2010-10-16 13:32:18 IST
உண்மை. நான் என் குடும்பத்தினரிடம் மற்றும் உறவினரிடம் கூறியதை, நண்பர் ஒருவர் நோட்டீஸ் விளம்பரம் செய்துவிட்டார். வாழ்க அந்த நண்பர் மற்றும் அவர் சமுகம். நன்றி!...
பொன்.ஐயம்பிள்ளை - சேலம்,இந்தியா
2010-10-16 13:31:19 IST
இலவசமா கொடுப்பதை இயலாதவன் பெறலாம். மற்றவன் வாங்குவதை தவிர்க்கணும். அரசாங்கம் பல சலுகைகளை கஷ்டபடுவோற்குதான் வழங்குகிறது. வாழ்கையில் முன்னேற துடிப்பவன் இலவசத்தை நம்பி உட்காரமாடான். இலவசதால சோம்பேறிங்க திருடாமளாவது இருப்பாங்க. இலவசம் இருப்பது நல்லது. எல்லா விஷயத்திலும் கெட்டது இருக்கிற மாதிரி இலவசத்திலும் இருக்குது. அவ்வளவுதான்.......
தமிழ் பிச்சை - நாகர்கோவில்,இந்தியா
2010-10-16 13:30:49 IST
இலவசத்தில் சுபிஷமாய் வாழ்வதாய் நினைக்கும் தமிழா ! நீ ஏமாற்றப்படுவதை எப்போது உணர்வாய். 1 ரூபாய்க்கு அரிசி அதில் ஊத்திக்க சாம்பார் வைக்கனுன்னா பருப்பு 40 ரூபாய். அதில போடுற, அவங்க கேபிள் பிசினஸ் தழைத்து வளரத்தான் இலவச டிவி, கேபிள் இணைப்ப இலவசமாய் தர சொல்லுங்க பாப்போம். அவன் கோடி கோடியா கொள்ளையடிக்கிறத கண்டுக்காம கேள்வி கேட்காம இருக்க தான் உங்களுக்கு இந்த இலவச பிச்சைகள். நீங்கெல்லாம் எங்கடா திருந்த போறீங்க. அறிவு மழுங்கி போன அப்பாவி தமிழா ....
muthu - chengai,இந்தியா
2010-10-16 13:14:32 IST
நோட்டீஸ் அடித்த கடவுளுக்கு மிக்க நன்றி...
ராமசந்திரன் - Japan,இந்தியா
2010-10-16 13:12:02 IST
ஒட்டு மொத்த தமிழனின் உணர்வுகளை வெளிபடுத்திய நண்பருக்கு நன்றி. இலவசம் மக்களை சோம்பேறியாக்குவது, இதை நாம்தான் உணர வேண்டும். இலவசத்திற்கு பதிலாக ஒரு வேலை கொடுக்கலாம்....
nasar - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 13:11:02 IST
இக்கருத்து மக்களுக்கு ஒத்து வராது. ஏனெனில் நமக்கு (தமிழனுக்கு)எது இலவசமாக கொடுத்தாலும் வாங்கும் பழக்கம். ஆகவே கருத்து நல்ல கருத்து. ஆனால் இது அரசியல் லாபம் தேடும் அரசியல் வாதிகளுக்கு புரியும் வரை பலன் இல்லை.நல்ல முயற்சி ஆனால் பலன் இருக்காது . முயற்சி செய்த நல்ல உள்ளத்துக்கு பாராட்டுக்கள் .வாழ்க தமிழகம்,வாழ்க தமிழன்.ஜெயஹிந்த் ....
இளையராஜா - வாட்கச்சென்,ஜெர்மனி
2010-10-16 13:05:01 IST
இதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் உண்மை..... நம் தமிழ் நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு தான்.........
ஹாஜ் முகமது - ஜெட்டாஹ்சவுதிஅரேபியா,இந்தியா
2010-10-16 13:03:16 IST
இந்த இலவசத்தின் கேட்டினை இதை விட தெளிவான முறையில் சொல்ல முடியாது .உழைப்பே உயர்வு. உழைப்பவனே தன்மானத்துடன் வாழமுடியும்...
சிங்கப்பர் - மயிலாடும்பூஞ்சோலைvirudhunagar,இந்தியா
2010-10-16 13:00:40 IST
இதை எல்லாம் விட 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயமே அழிஞ்சு போச்சு. விவசாயி எல்லாம் நெலத்தையும் வித்துட்டு கூலிகாரநா மாறிட்டு வர்றான். விவசாயிய சொல்லி குத்தம் இல்ல. கூலிகாரன் கிடைக்க மாட்டேங்க்குறான். என்ன என்றால் விவசாய கூலி 50 ருபா 8 மணி நேரம் கடுமையா வேலை பார்க்கணும். ஆன இங்க 100 ருபா வேலை 1 மணி நேரம் கூட கடுமையான வேலை கிடையாதே 8 மணி நேரம் டைம் பாஸ் தானே.. விவசாயே உழைக்க மறக்காதே பின்னால் ரெம்ப கஷ்டம் . பின் விளைவுகளை யோசித்து செயல் படுவோம்.................
A . SIRAJUDEEN - THIRUVAVADUTHURAI,இந்தியா
2010-10-16 12:56:25 IST
திரு செந்தில் / சுகி ஆகியோர்களின் கருத்தை வரவேற்கிறேன். இலவசம் என்று பெயர் மட்டுமே வுள்ளது, ஆனால் வுண்மையில் பலருக்கு இலவசமாக இல்லை. ஒரு சில ஏழை பொதுமக்கள் இதனால் பயன் அடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வுண்மை நிலவரம். வுங்களிடம் வசதி வாய்ப்புகள் இருக்கும் போது ஏன் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக இலவசங்களை பெற்றுக்கொள்கிரிர்கள்...அதை வசதி இல்லாதவர்கள் பெற்று பயனடைந்து அவர்களின் வறுமையை போக்கிகொள்ளட்டும். இப்பொழுதும் வுடல் வலிமை இருந்தும் வேலைக்கு சென்று சம்பாதிக்காமல் ஒரு சில சோம்பேரிககள் இருக்கத்தான் செய்கிறார்கள்...அவர்கள் கண்டிக்கப்பட, தண்டிக்கப்பட வேண்டியவர்களே...அதைவிட்டு ஒரு வேலை சாப்பாடு கூட கிடைக்காதவர்கள் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்கள் இந்த ஒரு ரூபா அரிசி போன்ற இலவசங்களால் பயனடையட்டும். அதற்காக சிந்தித்த அரசுக்கு நன்றிகள்....
விவேகாநந்தன் - சென்னை,இந்தியா
2010-10-16 12:55:09 IST
நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்ட தமிழனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நண்பா இதை நான் இணையத்தளத்தில் செய்து கொண்டு இருக்கிறேன்.....
c.ramasamy - tup,இந்தியா
2010-10-16 12:54:36 IST
இலவசம்...பரவசம்...தனிசுகம்....திருந்த மாட்டாங்க நம்ம மக்கள்....எனக்கு நம்பிக்கை இல்லை....i...
ஜெயக்குமார் - மதுரை,இந்தியா
2010-10-16 12:53:08 IST
திரு செந்தில் அவர்களே. நீங்கள் அரசு தற்போது தருவது இலவசமல்ல என கூறி உள்ளீர்கள். ஆனால் பிரச்சனை என்ன என்றால் ஒரு ரூபாய்க்கு அரிசி தருவதால், பல சோம்பேறிகள் ஒரு சில நாட்கள் மட்டும் உழைத்துவிட்டு பல நாட்கள் உழைக்காமல், வெட்டியாக திரிகின்றனர். மேலும் விவசாயம் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் மிக அதிக கூலி தர வேண்டும். அப்படி கொடுத்தால் விவசாய பொருட்களின் விலை உயரும். அப்படி உயர்ந்தால் நீங்கள் சப்போர்ட் செய்யும் கட்சியும் அதன் தலைவர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் 5 ஜென்மத்திற்கு வேண்டிய பணத்தை சுருட்டி விட்டார்கள். இனியும் இவர்கள் வந்தால், மொத்தமாக துடைத்துவிடுவார்கள். நமக்குதான் பிரச்சனை. இப்போ புரியுதா? நீ மட்டும் புத்திசாலி என நினைத்து, கருத்தை பதிவு செய்தால், இந்தமாதிரி பதில்களும் படித்து பதிவு செய்....
mannankatti - pondicherry,இந்தியா
2010-10-16 12:51:08 IST
ஆயிரம் இருந்து என்ன! இன்னும் அரசு மத்த வேலைக்கு எல்லாம் இலவசமா இன்னும் ஆளு ஏற்பாடு பண்ணி தரவில்லையே என்று இந்த மானம் அற்றுபோன மரத்தமிழன் ஏங்குவது யாருக்கும் புரியவில்லயே. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கும், உங்கள் மண்ணாங்கட்டி...
சேகுவேரா - கியூபா,கியூபா
2010-10-16 12:47:32 IST
என்று மடியுமோ இந்த இலவச மோகம்! விழித்திடு தமிழா!விழித்திடு. களவு போவது நம் உழைப்பு மட்டும் அல்ல, நம் தன்மானமும் தான். இரண்டாம் சேகுவேரா...
kumar - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 12:46:47 IST
இந்த தைரிய தமிழனுக்கு என் வாழ்த்துக்கள் .இப்படி இலவசங்களை கொடுத்து தமிழன் என்ற உணர்வை பறித்து அழிக்கிறார்கள் .ஈழத்தில் நம் உறவுகள் மாண்டார்கள். நாம் என்ன செய்தோம். இலவசக்களை கொடுக்கும் அரசுதான் என்ன நடவடிக்கை எடுத்திச்சு. வாழ்க உலகதமிழர் ....
MADHAN - FAHAHEEL,குவைத்
2010-10-16 12:45:58 IST
THOONGATHEY TAMIZHA THOONGATHEY...
செந்தில் - மதுரை,இந்தியா
2010-10-16 12:45:02 IST
பொதுமக்கள் உயர்தர சிகிச்சை பெற வழிசெய்ய வேண்டி கலைஞர் உயர்சிகிச்சை உயிர் காப்பீட்டுத் திட்டம். ஒண்ணே முக்கால் கோடி குடும்பங்களில் வாழும் ஒவ்வொரு உறுப்பினரும் 4 ஆண்டுகட்கு ஒரு முறை, 1 லட்ச ரூபாய் அளவிற்கு சிகிச்சைக்கு உதவி பெறலாம். தமிழ்நாடெங்கும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் முன்னூறு வண்டிகள் ஓடுகின்றன. எந்த ஊரெனிலும் மக் கள் ஆம்புலன்சை அழைத்தவுடனே வந்து, அவசர சிகிச்சை கிடைக்க கட்டணமில்லா மல் உதவுகின்றது. ஏழை, எளிய மக்கள் 108 அர்ச்ச னை செய்பவர்க்கு ஆண்டவனே வந்து உதவுவது போன்று, 108 ஆம்புலன்ஸ் வண்டி வருவ தாகக் குறிப்பிட்டு மகிழ் கின்றனர். அனைவருக்கும் தைப் பொங்கலுக்கு பொங்கல் பொருள்கள் யாவும் இலவச மாக வழங்கப்பட்டது -தமிழர்கள் அனைவருக்கும் பொங் கல் இன்பம் வாய்த்திட. இந்த இலவசங்கள், மூன்றுவேளையும் இலைவிரித்து உணவருந்தி, அஜீரணத்திற்கு மருந்து சாப்பிடும் வர்க்கத்தாருக்குச் செய்யும் தானம், தருமம் போன்ற முறையைச் சேர்ந்தது அல்ல. அதனால் இது சோம்பேறிகட்கென்று ஏற்பட்ட திட்டமுமல்ல, சோம்பேறியாக வாழ்வதற்கு வழிசெய்யும் திட்டமுமல்ல. தமிழக அரசின் இலவச திட்டங்கள் பல, அனாதைகட்கும், அபலைகட்கும் வாழ்வளிக்கும் திட்டமாகும். உயிர் வாழ்வதில் வெறுப்படையாமல் நம்பிக்கைகொள்ளச் செய்யும் திட்டங்களாகும். ஒவ்வொரு இலவச திட்டமும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் வாழ்வைச் செழிக்க வைப்பது. இந்த இலவசத்திற்காகச் செலவிடும் தொகை அளவுக்குக் கிடைக்க வேண்டிய உடனடி பலன் மட்டுமன்றி, நீண்டகாலத்திற்குப் பல நற்பலன்களைச் சமுதாயத்திற்கு விளைவிக்கிறது....
செந்தில் - மதுரை,இந்தியா
2010-10-16 12:43:49 IST
அங்கன்வாடியில் சேய்கட்கும், பள்ளிகளில் மாணவர்கட்கும் சத்துணவு, வாரம் 5 முட்டை அல்லது வாழைப்பழம் ஆகியவை இலவசமாக வழங்குவது வருங்காலத் தலைமுறை, நோய் நொடிக்கும் பெரும் பிணிக்கும் ஆளாகாமல் வாழச் செய்வதற்காக. முதியோருக்கு இலவச வேட்டி, புடவை- அந்த ஏழை களின் மானம் காத்திட, சமுதாயத்தில் அவர்கள் தன்மா னத்துடன் உலவ தரப்படுகிறது. படிக்கும் மாணவ- மாணவியருக்கு பள்ளிக் கட்ட ணம் இல்லை. புத்தகம் இலவசம். தேர்வுக் கட்டணமும் இல்லை. இலவச மிதிவண்டி, இலவச பேருந்து பயணம். ஆதிதிராவிட பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மாணவர்கட்கு இலவசமாகத் தங்கிப் படிக்க விடுதிகள் ஏற்படுத்துவது அடித்தட்டு மக்கள் வாழ்க்கை நிலையை உயர்த்தவே. பொதுமக்கள் உயர்தர சிகிச்சை பெற வழிசெய்ய வேண்டி கலைஞர் உயர்சிகிச்சை உயிர் காப்பீட்டுத் திட்டம். ஒண்ணே முக்கால் கோடி குடும்பங்களில் வாழும் ஒவ்வொரு உறுப்பினரும் 4 ஆண்டுகட்கு ஒரு முறை, 1 லட்ச ரூபாய் அளவிற்கு சிகிச்சைக்கு உதவி பெறலாம்....
செந்தில் - மதுரை,இந்தியா
2010-10-16 12:42:50 IST
இல்லாதாருக்கும், இயலாதாருக்கும், வாய்ப்பு வசதி அற்றோருக்கும் துணையற்றவருக்கும், கதியற்றவருக்கும் பயன்படவே ""இலவசம்''. அவர்கள் உழைக்காதவர்களோ, உழைக்க மறுப்பவர்களோ, உழவையும், உழைப்பையும் இழிவாக எண்ணுபவர்களோ அல்ல. கருவுற்ற தாய்மார்கட்கு -மகப் பேறு எய்துவதற்கு முன்னும் பின்னு மாக 6 மாதங்களுக்கு ரூ.6000 உதவித் தொகை அளிப்பது, அவர்கள் வயிற்றில் வளரும் சிசு, ஊனமோ, உடல்-மூளை வளர்ச்சிக் குறையோ எய்தாமல், நோய் நொடி வாராது தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறப்பதற்காக. திருமண உதவித் தொகை ரூ.25,000 ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து வயது வந்த பெண்ணுக்கு வாழ்வு கிடைக்கவும், பெற்றோரின் பெருங்கவலை யை மாற்றவுமே அது மறைமுகமாக- தற் கொலைகளையும், ஏக்கத்தையும் தவிர்க் கிறது. முதியோருக்கு, விதவைகட்கு, மாற்றுத் திறனாளிகட்கு வழங்கும் உதவித் தொகைகள்- அவர்களின் அன்றாட உணவுக்கு உதவ....
நடுநிலையாளன் - சிங்கபூர்,சிங்கப்பூர்
2010-10-16 12:38:54 IST
ஒரு ருபாய் அரிசி, முதியோர் உதவி தொகை, 108 ஆம்புலன்ஸ், மருத்துவ காப்பிட்டு திட்டம் போன்றவை தேவையானவை. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் குற்றம் குறையும். உலகின் வளர்ந்த நாடுகள் இதனை செய்கின்றன. ஆனால் வண்ண தொலைகாட்சி பெட்டி தவறான திட்டம்....
தமிழ் selvam - duabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 12:28:49 IST
அருமையான கருத்து,,,நோட்டீஸ் அடித்த நண்பருக்கு மிக்க நன்றி ...நாட்டை கடனாக்கும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..மக்கள் மாற வேண்டும் ,ச்சீ கேவலமாக இருக்கு ...அவன் கோடி,கோடி யா எடுத்துக்கொண்டு இவனுக்கு டிவி, பிச்சை போடுரான்...அவனுக்கென்ன அடுத்து ஆளவந்தா பார்போம் என, இருப்பதையெல்லாம் கொள்ளையடித்து ...கேட்பவனை எல்லாம் சோம்பேறி..பிசைக்காரனாக்கி ...தமிழனை பாதாளத்தில்..கொண்டு செல்கிறான்...விவசாயம் செய்ய ஆளில்லை ...எல்லாம் மண்ணா போகுது......
பிரசாத் - சென்னை,இந்தியா
2010-10-16 12:28:48 IST
இத சொன்னா நல்லாட்சி பிடிக்காம விஷமிகள் விமர்சனம் பன்றதா சொல்வாங்க...
பாலகுமரன் - தேனி,இந்தியா
2010-10-16 12:27:35 IST
சபாஷ்! உங்கள் முயற்சிக்கு, ஏற்பது இகழ்ச்சி என்று அக்காலத்திலேயே அவ்வையார் கூறியுள்ளார், நாம தான் பாஸ் என்றதும் புத்தகங்களை விற்று காசு பார்த்து விடுவோமே, எப்படி அதெல்லாம் நினைவிருக்கும்?...
இந்தியன் - சென்னை,இந்தியா
2010-10-16 12:27:01 IST
இது உண்மை. எனவே இதை தமிழகம் முழுவதும் செயல் படுத்துமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் . இந்த விழிபுணர்வுக்கு நன்றி...
Sivaprakasam - Tiripura,இந்தியா
2010-10-16 12:21:49 IST
For urination 3 Ruppes and ration rice-1 rs/kg. Salt-6 rs/kg. Very soon all people lazy like kerala and after rice will be 250/kg. Need labour from other state. Flnally like mumbai, all the crime will dancing in tamilnadu. Everyone become at least a coiunceler to easy to make crores. Very difficult to change people mind. Tasmark will lead tamilnadu. Jaihind....
பாலாஜி - beaufort,மலேஷியா
2010-10-16 12:21:09 IST
மிகவும் நேர்த்தியான கருத்துகளுடன் இன்றைய கழகத்தில் உள்ள அரசாங்கம் எவ்வாறு செயல் படுகிறது என்பதை இளைஞர் வெளிப்படுத்தி உள்ளார் ,, மிகவும் நன்றி ,,,...
சசி - kuwait,குவைத்
2010-10-16 12:14:00 IST
எந்த இலவசமும் productive ஆக இருந்தால் அது வரவேற்புக்குரியது; இங்கு எல்லாமே NON productive மட்டும் இல்லாமல், counter productive ஆக உள்ளது. இந்த நேரத்தில் யாராவது இதைப்பற்றி பேசுவார்கள் என்று நினைத்த போது, நல்ல இதயம் கொண்ட நண்பர்கள் சிலர் இந்த விழிப்புணர்ச்சியை தூண்டி விட்டிருப்பது மிகவும் வரவேற்க்கத்தக்கது. இது மேலும் மேலும் வளரவேண்டும். நன்றி....
கார்தீசன் - ஜித்தா,சவுதி அரேபியா
2010-10-16 12:07:40 IST
மக்களை, சுயநலத்திற்கும் குறுகிய நோக்கத்துடன் அரசியல் லாபத்திற்கும் தமிழ்நாட்டு வெங்காய அரசியல்வாதிகள் செய்யும் இந்த இலவச அரசியல் அவர்களின் உயிருக்கு கூடிய விரைவில் உலை வைக்கும். இனி இவர்கள் கட்டு கட்டாக பணம் இல்லாமல் அரசியல் நடத்த முடியாது, பதவியை பிடிக்க முடியாது. ஒவ்வொரு தேர்தல்களிலும் இனி பணத்தை தண்ணீராக இழைத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்றாகிவிட்டது. கொஞ்ச வருடம் கழித்து பாருங்கள், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள எம்.ல்.ஏக்களை கொன்று விட்டு மக்கள் இடைதேர்தளுக்கு தயாராவார்கள். அராஜகத்தின் உச்சமே கருணாவே. தமிழகத்தை ஆபத்தான பாதைக்கு கொண்டு போன பெருமை உன்னையே சேரும்....
radha - chennai,இந்தியா
2010-10-16 12:05:50 IST
பாவம் இவருக்கு எதுவும் கெடைக்கலையோ?...
கெர்சோம் செல்லையா - Chennai,இந்தியா
2010-10-16 12:04:12 IST
வாழ வழியற்றோருக்கு மட்டுமே வழங்க வேண்டும் அரசின் உதவிகள். ஏழைகள் இன்றும் இந்த நாட்டில் உண்டு; இவர்கள் முன்னேற அரசு இவர்களைக் கண்டறிந்து இவர்களுக்கு மட்டுமே இலவசங்கள்,அதுவும் தேவையான இலவசங்கள், வழங்க வேண்டும். இப்பணியை கையூட்டு வாங்காமல் அரசு அலுவலர்கள் செய்ய வேண்டும்; அரசியல் கட்சிக்காரர்கள் கொடுக்கும் பட்டியல் அடிப்படையில் ஏழைகளை உருவாக்கக்கூடாது!ஆனால் இன்று, அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், நடுவர், வழக்குரைஞர், அரசு உயர் அலுவலர், பொறியாளர், மருத்துவர், பெருஞ்செல்வர், வர்த்தகர், தொழில் அரசர் என்று எல்லோருமே நுகர்வோர் அட்டையில் அரிசி அல்லது சர்க்கரை வாங்கும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்! வெறும் அடையாள அட்டையாய், நுகர்வோர் அட்டையை வைத்திருப்போர் தமிழ் நாட்டில் எத்தனை பேர்? ஒரு விழுக்காடுகூடத் தேறாது! ஏழைக்குச் செல்ல வேண்டிய உதவியை ஏமாற்றிப் பறிக்கும் நாம் எப்போது திருந்தப் போகிறோம்? எப்போது உண்மையாய் இருக்கப் போகிறோம்? ஏழைக்கு இரங்குகிறவன், இறைவனுக்குக் கடன்கொடுக்கிறான்! ஏழை பெற வேண்டியதைத் தடுத்து, எடுத்துக்கொள்கிறவன் இறைவனை ஏமாற்ற முயன்று, தன்னை ஏமாற்றுகிறான்!...
கதிரேசன் சொர்ணவேல் - Mumbai,இந்தியா
2010-10-16 12:02:54 IST
இது மாதிரி ஈமெயில் நிறைய வரும், ஆனா முதல் முறை மக்கள் மத்தியல் நோட்டீஸ் மூலம் வருவது மிகவும் வரவேற்க தக்கது. இலவசம் எப்படி வருகிறது? அது யாருடைய பணம்? இலவசம் என்று சொல்பவரின் பணமா? என்று மக்கள் எப்போது சிந்திக்க தொடங்குகிரர்களோ, அப்போதுதான் தமிழகம் உருப்படும். அதைவிட மக்கள் தனது வாக்கு உரிமையை தவறாமல் அளிக்க வேண்டும். குறிப்பாக படித்தவர்கள் கண்டிப்பாக, தவறாமல் வாக்கு அளிக்க வேண்டும். நமக்கேன் இந்த வம்பு? எவன் ஆண்டா நமக்கென்ன? என்று இருப்பது பெரிய தவறு!!! வரும் தேர்தலில் இலவசத்தை எதிர் பார்க்காமல், தொழில், விவசாயம், விளையாட்டு, கல்வி ஆகியவர்டில் தமிழகத்தை முதல் மாநிலமாக ஆக்க முன் வரும் கட்சிக்கு, ஜாதி, மதம் பார்க்காமல் கண்டிப்பாக தவறாமல் வாக்கு அளிக்கவேண்டும்...
பெரியார் - சென்னை,இந்தியா
2010-10-16 12:00:01 IST
இதே நிலைமை நீடித்தால் என்றைக்கு அவனுக்கு டூ வீலரிலோ காரிலோ போகவேண்டும் என்று தோன்றுகிறதோ அன்று உழைத்து அதை வைத்திருப்பவனிடம் திருடுவான். இதனால் உழைப்பவனும் இலவசத்துக்கு போவான். பின்னர் இலவசம் கொடுத்து வோட்டு பெற்ற அரசியல் வாதியிடமும் சென்று ஆட்டையை போடுவான். இதற்குள் எல்லா தமிழர்களும் தொழிலையே மறந்து மிருகமாய் போவான். முதல் கட்டமாக இப்போது தமிழகத்தில் எங்கு போனாலும் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் வேலை பார்கிறார்கள். இதே போல் போனால் தமிழகம் மற்றும் தமிழர்கள் அழியும் நாள் வெகுதூரத்தில் இல்லை...
கத்திகுத்து கந்தன் - கணம்மபேட்டை,இந்தியா
2010-10-16 11:59:23 IST
வாங்கறவங்க வாங்கிட்டே இருக்காங்கப்பா...குடுக்குறவங்க குடுத்துகிட்டே இருக்கான்பா...எல்லாம் வச்சிருக்க மகராசன் தான் வாங்குறான்...வாங்கி பத்தோ ஐநூறோ வித்து காசகிறான்...இல்லாதவன் வாங்கி உபயோகபடுத்துறான்...இது ஒன்னும் ப்ரீ இல்லப்பா. மக்கள் நாம வரி பணம் தான் அங்கே இப்டி சந்துல சிந்து பாடுது....எதோ கேணை இப்டியாவது இதை குடுக்குதேன்னு வாங்கி போட பாருங்க..சும்மா அது இது நு நாசா நச்னு பேசி நேரத வெட்டியாக்கி இருக்க தேவை இல்லப்பா...இலவசம் தப்புன்னு சொல்றதுனால அவன் ஆச்சி என்ன இப்ப கவுந்துரவா போது. இல்ல வரவன் இலவசம் இல்லாம வேற கோவணமா கொடுக்க போறான்..எல்லாம் ஒரே மட்டை..போங்கடா பீத்த பயலுகளா........
கருத்து காற்று - பீச்சிட்டி,மொரிஷியஸ்
2010-10-16 11:55:02 IST
நண்பர்களே நீங்கள் இலவசத்தை மட்டும் பேசுகிறிர்கள். அதை தந்து பயனடைபவர்கள் யார் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். காஸ் அடுப்பு, தொலைகாட்சி,எல்லாம் வழங்குபவருடைய அரசும்,அவருடைய குடும்பமும் பயன் பெறுகிறார்கள். எப்படி என்றல் இன்று சிலிண்டர் உடைய காசு எல்லாம் அரசுக்கு. கேபிள் டிவி காசு எல்லாம் அவருடைய குடும்பத்துக்கு. மற்றும் இதற இனாம் எல்லாம் ஒரு சாதாரண ஏழையால் பெற முடியுமா? ஒரு ரூபாய் அரசியில் புழுங்க அரசி மட்டும் தான் கொடுகிறார்கள். பச்சை அரசி இல்லை என்று தான் சொல்கிறர்கள்.சிந்தியுங்கள் மக்களே.நன்றி...
தரணி - bangalore,இந்தியா
2010-10-16 11:43:26 IST
பசி உள்ளவனுக்கு ஒரு மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பதே மேல் good message from சிவன் - கைலாஷ்,இந்தியா then only INDIA Should become wealthy and good man power...
சோமன் - தோஹா,கத்தார்
2010-10-16 11:42:44 IST
இது போன்ற செய்திகளை பல லக்ஷ வாடிக்கையாளர்களை கொண்ட தினமலர் போன்ற பத்திரிகைகள் முதலிலேயே வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி இருக்க வேண்டும். காலம் கடந்து விட்டது போல் தோன்றுகிறது. தமிழன் இந்த செய்தி வெளி வந்திருக்கும் தினமலரையும் இலவசமாக கொடுத்தால் தான் படிப்பான். மானமிகு தமிழன் சற்றே மாறி ஈனமிகு தமிழன் ஆகி நாட்கள் பல ஆகி விட்டது....
mohaideen - manama,பஹ்ரைன்
2010-10-16 11:40:57 IST
அந்த print free ya கெடைக்குமா...
சாமி - MUSCAT,ஓமன்
2010-10-16 11:38:54 IST
இலவசம் இலவசம் ...................... இது மாதிரி இலவச பொழப்பு தேவையா????? இந்த இலவசங்களும், அதை ஊக்குவிப்பவர்களும் நாசமா போகட்டும்...
அப்துல் காதர் - காயல்பட்டிணம்,இந்தியா
2010-10-16 11:38:00 IST
நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்ட தமிழனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்....
சுதாகரன் - தர்மபுரி,இந்தியா
2010-10-16 11:34:27 IST
நல்ல விசயம். ஆனால் தமிழ்நாட்டில் செவிடன் காதில் ஊதின சங்கு போல தான் இருக்கும். மாற்ற முடியாது...
Velmurugan - madurai,இந்தியா
2010-10-16 11:34:25 IST
டாக்டர் எம் ஜி ஆர் : உழைக்காமல் சோம்பேறியாக இருந்தால் சோறு கிடைக்காது தம்பி. திருக்குவளை தீயசக்தி: உட்காந்து ஓய்வு எடு எல்லாம் உன் வீடு தேடி வரும் உடன்பிறப்பே : மனமுள்ள தமிழா இலங்கையில் வாங்கிய அடி(உரிமை போராடதுக்காக அடுத்த இனதுக்காரனிடம், ஆனால் தமிழ்நாட்டில் வாங்குவது நம் இனதுகாரனிடம் , அவன் எதிரி, இவன் துரோகி, எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்க முடியாது. மக்களுக்கு எதுவுமே செய்யாமல் ஏமாற்றுவது ஒருரகம், ஆனால் செய்வதுபோல் இலவசமாக குடுத்து சோம்பேறியாக்கி, நாட்டை கெடுப்பது இன்னொருரகம். மன்னர் ஆட்சியில்தான் மக்கள் கை தாழ்ந்தும் மன்னன் கை உயர்த்தும் இருக்கும், ஆனால் இந்த திமுக ஆட்ச்யிலும் அதே நிலைதான் நடக்குது. மக்களுக்கு செய்வது போல மாயையை ஏற்படுத்தி முட்டாள் ஆக்கிறது இந்த திமுக அரசாங்கம், ஓட்டுமொத்த தமிழனின் திறமையை சாகடிக்கும் திமுகவை சாகடிபோம் வேல்முருகன் மதுரை...
Mohankumaar - Tirupur,இந்தியா
2010-10-16 11:30:08 IST
அனைத்தும் இலவசம் என்றால் அந்த இலவசத்தை உருவாக்கவும் யாரோ ஒருவர் உழைக்க வேண்டுமே அதை யார் செய்வது........! இலவசத்தை கொடுத்து தமிழனை சோம்பேறி ஆக்கும் தமிழக அரசே நீ எப்போது உழைப்புக்கு மதிப்பு கொடுப்பாய்.........!தமிழகத்தை சுடுகாடு ஆக்கும் என்னமா உன்னக்கு........!...
வெங்கடேசன் - kovai,இந்தியா
2010-10-16 11:29:45 IST
தமிழகத்தின் நிலைமையை மிக சரியாக வெளிப்படுத்தி உள்ளனர். வாழ்த்துகள்...
வெங்கி - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 11:28:29 IST
இதெல்லாம் மானமுள்ள மனிதர்களுக்கு, தமிழகத்துக்கு பொருந்தாது, அப்புடியே ரோசம் வந்துதான் என்ன செய்வது, நாங்கள் தான் இத்தனை தொஹுதி என்று சொல்லி வைத்து வெற்றி பெற்று விடுவோமே அப்புறம் டிவி இல் சினிமா விருது நிகழ்ச்சி பிரமாண்டமா நடத்தி புடுவோமே தலைவரை எல்லோரும் பாராட்டும்போது எவனாவது குறை சொன்னா எதிர் கட்சி தூண்டலில் பேசுறான் என்று சொல்லிவிடுவோமே...
kavitha - virudhunakar,இந்தியா
2010-10-16 11:28:14 IST
இந்த இலவசத்தை முதலில் ஓடி போயி வாங்குவது ரத்தத்தின் ரத்தங்கள் /தினமலர் ரெம்ப ஓவரா போகாதே .ஆ.தி.மு.க. முட்டாள்கள் இதை வாங்கவே இல்லை என்று தினமலர் நிருப்பிக்க முடியுமா .எவன் குடும்மத்தினர் இலவசத்தை வாங்கவில்லையோ அவன் எழுதட்டும் ....
saravanan - மலே.,மாலத்தீவு
2010-10-16 11:18:56 IST
சரியாதானே நோட்டீஸ் அடிச்சிருக்காங்க! ஆனா மக்கள் திருந்த மாட்டாங்க! அரசியல்வாதி திருந்தவும் விடமாட்டான்!? தனி மனித சுய ஒழுக்கம் வராத வரைக்கும் நாடு திருந்தவே போறதில்லை!...
bala - nigeria,இந்தியா
2010-10-16 11:18:44 IST
vangathe vangathe elavasa porulai vangathe.......... vangathe vangathe tamilan manathai vangathe............
D.M.Maran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 11:18:10 IST
இங்கே கருத்து சொல்பவர்கள் எத்தனை பேர் தனக்கு வரும் இலவசங்களை வேண்டாம் என கூறியவர்கள் ? ரேஷன் பொருளும், சிலின்டர், டீஸல்,போன்றவையும் ஒரு வித குறைக்கப்பட்ட விலையில் தான் அரசு தருகிறது. அத்தினை சலுகைகளும் எத்தனை பேர் வேண்டாம் என கூறதயார் ? ரேஷன் அட்டையை, (அடையாள அட்டை அல்ல என பல முறை குறிப்பிட்டும்) எத்தனை பேர் அதை வேண்டாம் என கூறினார்கள் ? உங்களுக்கு தேவை இல்லை என்றால் விடுங்கள் தேவை உள்ளவர்கள் வாங்கட்டும். மறக்கவேண்டாம் இந்தியாவை பொறுத்தவரை "உங்களின் தேவை இல்லாத பழைய துணி பலபேருக்கு மானம் காக்கும் புதிய உடை"....
கே.குற்றாலிங்கம் - அருப்புகோட்டை,இந்தியா
2010-10-16 11:14:13 IST
தினமலர் தயவு செய்து இந்த செய்தியை முழு பக்கமாக மக்கள் நலன் கருதி தினசரி வெளியிட வேண்டும்....
விச்வசு - தமிழ்நாடு,இந்தியா
2010-10-16 11:11:04 IST
அது சரி. இலவசத்தின் யோக்கியதை என்ன.? இலவச டிவியோட லைப் 3 மாசம். எல்லா இலவசமும் தேர்தல் வரைக்கும் மட்டுமே. இப்பிடியே போனால் -2011-ல Governement திவால். அப்புறம் சம்பளம் போனஸ் கூட கொடுக்க முடியாது.அதையும் பிட் நோட்டீஸ்-ல சொல்லுங்க....
அப்துல்லாஹ் அப்துல்கபூர் - jeddah,இந்தியா
2010-10-16 11:10:02 IST
கருத்துக்கள் அருமை அவசியம் கலைஞர் சிந்திக்கவேண்டிய விஷயம் வாசகர்களின் கருத்துக்கள் நிலைமை அறிந்து எழுதவேண்டும். இப்ப தமிழ்நாட்டில் திருடர்களுக்கு என்ன பஞ்சம் எந்த மாவட்டதிலாவது திருட்டு இல்லாமல் இருக்கா? இதை ஒழிக்க மானங்கெட்ட அரசு திட்டமிடுதா செயல்பாடு ஏதாவது இருக்கா கொலையை தடுக்கமுடியுதா கவ்ரவபிச்சை எடுப்பதை மக்கள் சிந்திக்கவேண்டும். அதேசமயம் அடிதட்டுமக்களைப்பற்றி எந்தவாசர்களும் சிந்தித்த மாதிரி தெரியவில்லை. யாரும் யாருடய பாக்கெட்டிலிருந்தும் கொடுக்கவில்லை. அதே சமயம் மக்களை சீரழிக்க கூடிய விதமாக இருக்கு இலவசம் என்பது வேதனைதான் யார் சிந்திப்பது?...
சிவகுமார் - பெங்களூர்,இந்தியா
2010-10-16 11:09:09 IST
வெல்டன் ...குட் job....Realy coming generation wont accept. But Lot of peoples are not worring about this.Ex Lot of my friends in IT industry. But they are not ready to ready daily news paper also..If I ask they r saying what can I do as a single person and comments also about me...See educated peoples are speaking useless think about others..They are earing good money But No common knowldge...I cant say all peoples are like this But Currently lot of ppeolples are in SELFESH.......
பாலமுருகன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-10-16 11:08:59 IST
நமக்கு தேவை ஒரே ஒரு இலவசம் தான். அது கல்வி மட்டுமே. எந்த ஒரு அரசியல்வாதி இதை தைரியமாக மக்களிடம் சொல்லி ஒட்டு கேட்கிறானோ அவனே உண்மையான மக்கள் பிரதிநிதி. சிந்திப்போம். ஜெய் ஹிந்த்...
chandrasekaran - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 11:08:43 IST
I really agree with the content of the notice. I use to discuss the same issue almost in the similar line whenever I meet my friends. Why the government has to give everything at free of cost. Let the creat job opportunity and give the salary. There are certain people who will take commissioni from their salary also. But slowlly this attitude can be eradicated. The content is every tamilians feeling only....
கண்ணன் - thiruvidaimarudur,இந்தியா
2010-10-16 11:04:29 IST
இதில் சொலப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் உண்மை. இலவசத்தை ஒழிப்பது நல்லது, இல்லையெனில் நமது சந்ததியினர் பிச்சை எடுக்க வேண்டும்.... கண்ணன் திருவிடைமருதூர் (சவுதி)...
vengat - chennai,இந்தியா
2010-10-16 11:02:13 IST
மாணவர், இளைஞ்சர்களை சோம்பேறியாக்கும் இலவசங்களை மாணவர் சமுதாயம் தான் எதிர்த்து போராட வேண்டும், பிச்சை எடுத்து திரிந்து கொண்டிருந்த உடன் பிறப்பு களிடம் எல்லாம் scorpio, innova, 100acre நிலம் இந்த நாலு வருஷத்துல இதல்லாம் எப்படி சாத்தியம், வருஷ கணக்குல ஒழைகிரவன் எல்லாம் இத மாதிரி வாழ முடியலியே? உடன் பிறப்புங்க மட்டும் எப்படி? தலைவர் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி....
ராஜா - சேலம்,இந்தியா
2010-10-16 11:01:59 IST
இப்படி இலவசம் இலவசம் என்று சொல்லி அனைவரையும் ஏமாற்றுபவர்கள் ஏமாறும் மக்கள் உள்ளவரை எமற்ற தான் செய்வார்கள். மக்கள் விழித்திட வேண்டும்....
சூர்யா - qatar,இந்தியா
2010-10-16 10:57:33 IST
இந்த இலவசம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை கீழ் தட்டு மக்களுக்கு இலவசமாக கரண்ட் ,டிவி ,காஸ் etc, போன்றவை கிடைக்கின்றன அது போல மேல் தட்டு மக்களுக்கு கரண்ட் ,வரி ஏய்ப்பு ,etcபோன்றவற்றில் அவர்களும் சுகமாய் வாழ்கிறர்கள் ஆனால் நாடு தர மக்களுக்கு இலவசமாக டிவி,காஸ்,கரண்ட் ,etc,போன்றவை ஏதும் கிடைப்பது இல்லை மேலும் விலைவாசியால் பெரிதும் பாதிக்கபடுவது நாடு தர மக்களே இதை யாராலும் மறுக்கமுடியாது ,ஒரு தமிழனின் மனசாட்சி...............!!!!!!...
RANGARAJAN - CHENNAI,இந்தியா
2010-10-16 10:57:16 IST
இது மிக மிக ஒரு முற்போக்கான சிந்தனை. இதனை நாள் நாம் எல்லோருடைய மனதினில் இருந்து வெளிப்பாடு வேதனையை இவர் மிக நன்றாக வெளியிட்டுள்ளார். ஆனால் இதை வெளியிட்டவர் ஒரு தீவிரவாதியை போல தான் அறியபடுவார். அது தான் நாம் தமிழ்நாட்டின் நிலை. இங்கு ஏழை மக்கள் மீது முன்பு இரக்கம் ஏற்பட்டது. இப்பொழுது அவர்களை பார்த்தல் நம்முடைய உழைப்பை, உழைப்பால் ஈட்டும் வருமானத்தில் நாம் கட்டும் வரிபணத்தில் கஷ்டப்படாமல் ஓய்வாக உறுஞ்சுபவர்களை போல தான் நமக்கு தோன்றுகிறது இந்த இலவசமேல்லாம் ஒரு நாள் நின்று போகும் அப்பொழுது எங்கு போவார்கள் இவர்கள். அப்பொழுதும் நம்மிடம் தான் திருடுவார்கள், வழிப்பறி செய்வார்கள், அடித்து பிடுங்குவார்கள். இப்பொழுது இவர்கள் செய்வதும் ஒருவகையில் அது தான். இவ்வளவு செய்தும் வரி கட்டுபவர்களுக்கு நடுத்தர மக்களுக்கு இங்கு மரியாதை இல்லை, பாதுகாப்பு இல்லை. ஏழை என்பது நாம் தமிழ்நாட்டில் ஒரு ADVANTAGE தான்....
கருத்து குஞ்சு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-10-16 10:56:48 IST
அய்யா இப்ப நம்ம நாட்டில் உழைத்து விவசாயம் செய்ய நிலம் கிடையாது.நாம் இப்படி உழைக்க முடியும்.நம்ம தமிழ் நாட்டில் உள்ள எல்லா விவசாய நிலத்தையும் இந்த பால போன ரியல் எஸ்டேட் காரனுக நிலத்தை வீட்டுமனையா போட்டு ஒரு வீட்டு மனை வாங்குன ஒரு வீட்டு மனை இலவசம் என்று கூவி விற்கிறான்...மற்றொரு பக்கம் இலவ டிவி,இலவச அடுப்பு,இலவச வேட்டி சேலை,இலவச அரிசி,பருப்பு,உழைக்காமல் இருந்து சம்பாரிப்பதர்க்கு ஓர் 100 நாள் வேலை திட்டம்.இப்பாடியே எல்லாம் இலவசம் என்று கொடுத்து மக்களை உழைக்க விடாமல் செய்து விட்டது நம்ம அரசியல் கட்சி அரசாங்கம்.இன்னும் ஒன்று மட்டும் இலவசமாக கொடுக்க முன் வர வில்லை..என்ன தெரியுமா குழந்தை இலவசமா கிடைக்கும் என்று,அதவும் கிடைத்தால் நம்ம மக்கள் போய் வரிசையில் நிற்று வாங்கி வருவார்கள்.......
ராஜுராஜு - Singapore,இந்தியா
2010-10-16 10:52:50 IST
Yes. Medical and Education can be free but now we can not these two services with quality. So everyone should reject free items and look for job and opportunities .. No country can survice. Now farmers converting their fertailed land into plots and look for Re 1 /- kg rice Shame on all the rulers.. because everyone is comepting to give free .....
மும்பை ராஜா - மும்பை,இந்தியா
2010-10-16 10:50:04 IST
இவன் தான் உண்மை தமிழன். என் போன்ற இளைஞ்ர்களின் ஆதங்கத்தை நோட்டீஸ் மூலம் தைரியமாக வெளிப்படுத்தியதற்கு பாராட்டுக்கள். தன்மானம் உள்ள தமிழன் இலவசத்தை விரும்ப மாட்டான்....
ambalmani - singapore,இந்தியா
2010-10-16 10:41:27 IST
இலவசம் என்பது ஏமாற்று வேலை .இவர்கள் கொடுக்கும் இலவச பொருள் 100 ரூபாய் என்றால் நேரடியாக அப்படியே எதுவும் மக்களுக்கு கிடைக்காது . இலவசம் உடன் பிறப்புக்களையும் அதிகாரிகளையும் நன்றாக வாழ வழி வகுக்கும் . தமிழா விழித்திடு ....
hari - நியூdelhi,இந்தியா
2010-10-16 10:41:12 IST
தமிழ் நாடு மக்களை இலவசம் என்ற பெயரால் பிச்சைகாரர்களாக மாற்றிய திராவிட கட்சிகளை நாம் என்ன செய்ய? நோட்டீஸ் விநியோகிக்கும் மர்ம நபர்களே பண உதவி தேவை பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்.... முடிந்த உதவிகளை செய்ய தயராக உள்ளோம். sudhan24@yahoo.com...
Ravi - Bangalore,இந்தியா
2010-10-16 10:29:11 IST
இதில் எதுவும் தப்பு இல்லை. உள்ளதை தான் பிரசுரம் செய்து உள்ளர்கள் வாழ்க...
selvan - chennai,இந்தியா
2010-10-16 10:24:43 IST
இந்த லிஸ்டில் மலிவு விலை மளிகை சாமான் (50ருபாய்க்கு) சேர்க்கவில்லை....
மங்களத்தான் - Kuwait,குவைத்
2010-10-16 10:24:19 IST
இதில் எல்லோரும் ஒன்றை மறந்து பேசுகிறோம். இந்த இலவசங்கள் எல்லாம் மக்களுக்கு மிகவும் பழகி போய்விட்டது. இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுவரை கொடுக்கப்பட்டு வந்த எந்த இலவசங்களையும் நிறுத்த போவதில்லை. இன்னும் என்னென்ன மாதிரி புதுபுது இலவசங்களை வாரி வழங்கலாம் என்றுதான் திட்டமிடுவார். இல்லையெனில் அவர்களால் கட்சி நடத்த முடியாது. "ஓட்டு வங்கி அரசியல்" இங்கு நடக்கும் வரை இந்த இலவச திட்டங்கள் தொடர்வதை எந்த கட்சியும் நிறுத்த போவதில்லை. இந்த எதார்த்த உண்மை நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தும் ஏதோ மாற்று கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த இலவசங்கள் இல்லாமல் போகும் என்பதுபோல் பிதற்றயுள்ளோம்....
shaikfareeth - திருப்பூர்,இந்தியா
2010-10-16 10:22:15 IST
எத்தனை தடவை சொன்னாலும் நம் மக்கள் கேட்க மாட்டார்கள். ஒரு சோம்பேறி சமுதாயம் உருவாகி வருகிறது. இந்தப் புகழ் அனைத்தும் இருபெரும் கழகங்களையே சாரும்....
shanmugasundaram - kolkata,இந்தியா
2010-10-16 10:21:39 IST
தமிழன் வாழ்க்கை இப்படித்தான் போகிறது . இது உண்மையே. குடும்ப உறுப்பினர் மட்டுமே அரசியல் பண்ணவேண்டும் என்றால் இதுவே சரியான வழி அல்லவா. தமிழனுக்கு எமாருவதே வாழ்க்கை ஆகிவிட்டது. இளைய தலைமுறைகளே விழித்திடுங்கள். தமிழா அறிவை பெற்றிடு. அறிவை பெற கல்வியை கற்றிடு. கற்றவுடன் உழைக்க துணிந்திடு , கற்ற அறிவை உழைப்பில் செழுத்து. உனது வாழ்க்கை உன்கையில் ....
ibrahimsyed - thammampatti,இந்தியா
2010-10-16 10:20:40 IST
All forEign emplyers please come to our owen country make it futre india...
ஆர்.கோட்டைசாமி தேவிபட்டினம் - dubai,இந்தியா
2010-10-16 10:17:36 IST
உலக தமிழர்களுக்கு வணக்கம் நீங்கள் வெளி உலகங்களில் தமிழன் என்ற பெயரை உழைப்பிலும் ,கடமையிலும்,நேர்மையிலும் அயராத உழைப்பிலும் தமிழனின் பெயரை நிலைநாட்டி வருகிறீர்கள் வந்தும் உள்ளார்கள் அனால் இந்த மாதிரி தமிழர்களை முட்டாள் ஆக்குவது ஒரு தமிழன் அதை மறக்கவேண்டாம் இலவசம் என்ற சொல்லுக்கு உள் கமிசன் உண்டு தெரியுமா நீங்கள் வாக்கும் இலவசம் எல்லாம் அந்த மதிப்பு தெரியுமா ஒரு வேஷ்டி சேலை விலை நடுத்தர மக்களுக்கு 300 ரூபாய்க்கு வாங்கிவிடலாம் அது சில்லறை விற்பனை ஆனால் இவர்கள் கொடுக்கும் அது 80 ரூபாயில் முடியும் அதற்கு அரசு நிர்நைக்கும் விலை 150 தில் இருந்து 200 குள் முடியும் இப்படிதான் இலவசம் கொடுக்கபடுகிறது அதனாலதான் ஆசியாவின் இரண்டாவது பணக்காரராக உள்ளார் இது நேற்று இன்று இல்லை 40 வருடங்களுக்கு முந்தையது ஒரு மை பேனாவை எடுத்து கொண்டு பெரியார் கையை பிடித்துகொண்டு சென்னை கூடத்தில் பேச கால் ருபாய் வாங்கமருதவருக்கு என்ன வெங்காய பயலுகளுக்கு இது போதும் என்று சொன்ன மாமனிதர்க்கு ,மூன்று எழுத்து திமுக வில் முன்று எழுத்து ஊழல் என்ற வார்த்தை அறிமுகம் செய்து வந்தவர்க்கு இதல்லாம் உங்களுக்கு முடியுமா சிந்திங்கள் திமைதான் அதற்காக தமிழர்களை முட்டாளாக நினைககூடது இவர்கள்தான் வெளி நாடு செல்பவர்களுக்கு இந்தி அறிவையும் மறைத்து விட்டார்கள் அயோக்கியர்கள் வெளி நாட்டில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும் அதன் அருமை இப்படி எத்தனையோ உண்டு எப்போது தமிழர்கள் திருந்துவீர்கள் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா எல்லாம் மாறி விட்டது உங்கள் பிழைப்பை பாருங்கள் சார் இல்லை என்றல் குடும்பம்தான் கஷ்டப்படும் ஜாக்கிரதை நன்றி தினமலர்...
ramesh - UAE,இந்தியா
2010-10-16 10:09:42 IST
Very good notice.I hope all people will accept this except useless political parties....
கவரிமான் - திருச்சி,இந்தியா
2010-10-16 10:08:29 IST
ஐயோ அவமானமா இருக்கே எனக்கு...
அருள் - Dubai,இந்தியா
2010-10-16 10:08:27 IST
இதில் சொலப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் உண்மை..... நம் தமிழ் நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு தான்...... .................. & இலவசத்தை ஒழிப்பது நல்லது !!! நம்மை சோம்பேறிகளாக மாற்றுகிறது... ...................... தமிழ் நாடு வாழ்க.......................
Robertson - India,இந்தியா
2010-10-16 10:05:25 IST
செந்தில் இந்தியா, அவர்களின் கருத்தை தவிர மற்ற அத்தனை பேரும் சும்மா வெட்டி கருத்துக்களை சொல்லி இருக்கின்றார்கள்...
சங்கர் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 10:03:18 IST
எங்கும் இலவசம் என்னும் மாயா உலகதில் தமிழர்கள் உள்ளார்கள். இதற்கு காரணம் ஆளும் கட்சி. இலவசமாக கொடுகபடுகிற பொருட்கள் அனைத்தும் மக்கள் வரி பணத்தில் இருந்து தான வருகின்றது.இது எப்படி இருகின்றது என்றல். தேடுறன் பழனிஆண்டி தின்கிறவன் ______ ஆண்டி. இப்படி ஒரு பழமொழி உண்டு. அப்படி இருகிறது. தமிழக மக்களை தயவு செய்து இலவசத்த நம்பாதிஙக. வாழ்க பாரதம் வளர்க தமிழகம்....
சாமி - திருப்பூர்,இந்தியா
2010-10-16 09:52:09 IST
யாரப்பா அது. ஏதும் ஒழுங்கா கிடைக்கலன்னா உடன்பிறப்புகளை பாருங்க. கண்டிப்பா கிடைக்கும். இப்படி நல்லரசுக்கு எதிரா தப்பு தப்பா செயல்படறது சரியா தோணலை. இது இலவசங்களை பெற்று இனிய வாழ்க்கைதன்னை அழித்துக்கொள்ளும் மூளையற்ற, சொரனையற்ற படித்தும் மேதாவியாக இருக்கும் பயனாளர்களின் களிப்பு வார்த்தைகள். "என்தமிழ்நாடு கை ஏந்தும் நிலை, உழைத்து வாழ்வோம் என்பது மறந்து போயே போச்சுங்கோ."...
sivanesan - singpore,இந்தியா
2010-10-16 09:43:13 IST
தமிழா உனக்கு பாடியும் இலவசம் , அடுத்த முறையும் பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடும்போது .......
சேரன் ச - chennai,இந்தியா
2010-10-16 09:39:20 IST
எதுவுமே இனமாக கொடுக்ககூடாது . அத்தியாவசிய பொருள்களின் விலையை குறையுங்கள். கல்விக்கு மட்டும் விதிவிலக்கு We have to appriciate the thoughts. Thx. Cheran s...
ச.Kumar - சவுதிArabia,இந்தியா
2010-10-16 09:31:47 IST
இது தமிழ் மக்கள் அறியவேண்டிய ஒன்று...
தவச்செல்வம் - sivagangai,இந்தியா
2010-10-16 09:31:36 IST
ரெம்ப கரெக்டா சொன்னீங்க வேண்டாம் இலவசம் செல்வம் துபாய்...
சசிகலா நடராஜன் - பூஞ்சோலை,இந்தியா
2010-10-16 09:29:01 IST
இத யார் செஞ்சிருப்ப நு சின்ன பிள்ளைய கேட்டா கூட சொல்லிரும்.அடிச்சி சொல்லலாம் அ இ அ தி மு க தான் வேறா யாரு?ஐயா இலவசத்தை வெறுக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒன்னு சொல்ல கடமை பட்டு கொள்கிறேன்....இதாவது கிடச்சதேன்னு கிடச்சவன் வாங்கறது நல்லது.என் சொல்லு இவனுக எல்லாம் திருந்த போவது இல்லை.சுத்தமா எல்லாரும் ஏமாளிய உகந்த்ருக்கதுக்கு நம்ம மக்கள் காசுல பலருக்கு இது கிடைக்குது...கடிசில மிச்சம் ஒரு சைகிள் ஒரு அடுப்பு ஒரு டிவி பொட்டி 1 ரூவா அரிசி நு எதுமே இல்லமா பப்பர மிட்டாய் சப்றத விட இது மேல்னு சொல்லலாம்.இலவசத ஆதரிச்சி பேச வரல.எந்த கட்சியா உங்களுக்கு என்ன செஞ்சிருக்கு.வரான் உகர்றான் லஞ்சம் குடுத்தா வேல கிடைக்குது பதவிக்கு வந்து லஞ்சம் வாங்குறான்...இதே கதையா தான் எல்லா துறைலயும் எல்லா விஷயத்துலயும் இருக்கு.மனசுல கைதொட்டு சொல்லுங்க.......
சிவா - பருகூர்,இந்தியா
2010-10-16 09:27:25 IST
ஹே! இதே வரிகளை நான் சில மாதங்களுக்கு முன் ஜெயா டிவி விசுவின் மக்கள் அரங்கத்துல (ஒரு ரசிகர் எழுதி இருந்ததை) விசு அவர்கள் படித்து காட்டியதை பார்த்தேன்.......................
கார்த்திக் - coimbatore,இந்தியா
2010-10-16 09:26:53 IST
தமிழா !!! இலவசத்தை ஒழிதுடு!!! உழைத்து உலகை உன்வசமாக்கு......... விழித்திடு ........உழைத்திடு .........
v.c. sekhar - Chennai,இந்தியா
2010-10-16 09:23:47 IST
Huge amount of tax payers' money is being squandered by these freebies. This money could be better used on laying good roads and for providing clean water to all the people. Also use the money for constructing storage facilities for grains, vegetable and other food articles whose prices have shot up to unprecedented levels. Obviously the Govt has an eye on elections when giving out free items....
baskar - oman,ஓமன்
2010-10-16 09:22:24 IST
தினமலர் கு நன்றி! தமிழன் இபோவவது எழட்டும்,...
பிரசன்னாஹ் - சென்னை,இந்தியா
2010-10-16 09:08:01 IST
என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன். முன்பு புத்திசாலி அதிகமான தமிழகம் இன்று பரிதாபம்...
Prakash - Malaysia,இந்தியா
2010-10-16 09:00:41 IST
Mr . கருணாநிதி உங்களிடம் நேரில் கேட்க வாய்ப்பில்லை . . இதை ஒரு சந்தர்பமாக கருதி கேட்கிறேன் . . உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள், இந்த இலவசங்களால் தமிழக மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும் என்று நினைகிறிர்களா? அப்படி நீங்கள் நினைத்தால் உங்கள் அரசுக்கு இன்னும் ஒரு திட்டத்தையும் தருகிறேன் . . ரேசன் கடைகளில் மதுபானம் + ஊறுகாய் இலவசமாக கொடுத்தால் உங்களின் ஆட்சி முழுமை அடையும் . . இப்படிக்கு குடும்பத்தை விட்டு வெளிநாடு சென்று உழைத்துக்கொண்டிருக்கும் + மனம் வெதும்பிய தமிழர்களின் வரிசையில் . . . இன்னொரு தமிழன்...
D.M.I.RAJ - அஜ்மான்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 08:55:59 IST
தமிழனுக்கு சரியான சவுக்கடி. சிந்திக்க சரியான நேரம்...
தமிழ் - சென்னை,இந்தியா
2010-10-16 08:47:52 IST
உண்மை...
Kumar - Mannheim,ஜெர்மனி
2010-10-16 08:46:07 IST
இந்த இலவசத்தை ஒழித்திடு,விழித்திடு அறிக்கை சில வாரங்களுக்கு முன் ஜெயா டிவியில் விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் திரு.விசுவிற்கு ஒருவர் எழுதி அனுப்பியதை விசுவே வாசித்துக்காட்டினார்.ஆக இந்த அறிக்கையை அதிமுக அபிமானிகள் யாரோ அச்சிட்டு விநியோகிக்கின்றனர். கலைஞர் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களை அவர் இலவசங்கள் கொடுத்தே சீரழித்து இன்னும் சோம்பேறி ஆகுகிறார்.இப்படி கொடுத்தால் தான் தன் ஊழல் ஆட்ச்சியை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற நினைப்பு.தமிழ்நாட்டு மக்கள் இன்னும் மாக்களாகவே இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டத்தான் செய்யும்....
ஊரான் - தமிழகம்,இந்தியா
2010-10-16 08:45:23 IST
மிக அருமையாக எழுதப்பட்ட/அச்சிடப்பட்டவை இதில் சொல்லபட்ட கருத்துக்கள் அனைத்தும் உண்மை. நண்பா வளர்க உன் தொண்டு.................
Mathubalan - Saidapet,இந்தியா
2010-10-16 08:42:58 IST
முற்றிலும் உண்மை.. இது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் நன்றாக தெரியும்... ஆனாலும் தங்கள் லாபத்துக்காக மக்களை சோம்பேறி ஆக்குகிறார்கள் .. ஏன் இலவச கல்லூரி படிப்பை எல்லோருக்கும் தர முயற்ச்சி செய்ய கூடாது??...
MADASAMY - DUBAI,இந்தியா
2010-10-16 08:41:34 IST
Dear. All . We have to much community , some family realy don't have work ,did not allowed for work them in Ltd company.so when will be tamilan thinks all of tamilan and sister& brothers, that time can you make notice. now no need....
peter Bethlone - chennai,இந்தியா
2010-10-16 08:36:54 IST
very good move.Tamil nadu in pathetic stage because of karuna family.Entire law and order problom is because of creating unemployed youngsters....
gopalan - trivandrum,இந்தியா
2010-10-16 08:32:07 IST
எல்லோருக்கும் தெரிந்த ஓன்று. அதை ஆக்கப்பூர்வமாய் நோட்டீசில் வெளியிட்டிருக்கும் நண்பரை பாராட்ட வேண்டும். பெரிய காரியங்கள் இதை போன்று தான் தொடங்கியிருக்கிறது. படித்தவர்களும், பேர் பெற்ற வல்லுனல்களும் வாய் மூடி மௌனியாய் இருக்கும் நிலையில் இது பாராட்டப்பட வேண்டியது. மக்கள் திருந்துவார்கள?...
SUNDARAM - kallippatti,இந்தியா
2010-10-16 08:26:26 IST
நான் வெகு நாட்களாக நினைத்து இருந்ததை ஒரு தமிழன் அழகாக எழுதியதை வரவேற்கிறேன். நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு...
sathiya - male,மாலத்தீவு
2010-10-16 08:18:56 IST
10,000 child and womens died at Sir Lanka (tamilans) no body care about it from Tamil Nadu even he can`t visit there if any body died in our family by guns how we feel ? first save Tamil Nadu then we need free offers,You know in Tamil Nadu how ever they can make bad politics for 4 years before election 2 month they will announced some free items or offer then they will win the election such as " gas stove , TV,mixer machine, please tamila we are the real traditional peoples in world we have the real culture than others anybody can`t beat us further get wakeup from fucking Tamil Nadu politician for the politicians 1.as a tamilan we need kamarajar period 2.don`t show family politics 3 don`t make lazy to tamilan 4 make show to save out Tamil Nadu 5 Get enough water from other state 6 don`t waste money 7 make good employee vacancy's in Tamil Nadu always with Tamil sathiya Maldives...
மணி - சிக்கோடி,சிங்கப்பூர்
2010-10-16 08:17:38 IST
இந்த ஆட்சியாளர்கள் தமிழர்களை பிச்சை காரர்களாக பார்த்து விட்டுதான் போவார்கள் அப்போதும் இவர்களுக்கு...
selva - sydney,ஆஸ்திரேலியா
2010-10-16 08:17:32 IST
good work & hard work,in internet our commands will reach only few but hand bill will reach last common man, free, free........ makes tamilan lazy & fool. Few sleeping giants are wake up....... continue.......
GANESH - abudhabi,இந்தியா
2010-10-16 08:16:26 IST
Everybody should think. This all free item money comes from where???? Public tax only. Think and give reply for free items....
ராஜேஷ் - பெங்களூர்,இந்தியா
2010-10-16 07:56:28 IST
நண்பா, இந்த நற்செயலை செய்த உனக்கு என் வாழ்த்துக்கள். மக்கள் திருந்தினால் ஒழிய நாடு திருந்த வாய்ப்பு இல்லை...உன்னைப்போல் ஒருவன் தொடங்கி வைத்த இந்த தீ எரியட்டும்..அப்பொழுதாவது நாடு நலம் பெரும் என்றால் நமது அடுத்த தலைமுறை நன்றாக வாழும்....
அன்வர் பாஷா - புரசைசென்னை,இந்தியா
2010-10-16 07:49:30 IST
என்ன அய்யா ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டீர்கள். கொடுப்பதற்கு ஆள் இருக்கும்போது மக்களுக்கு என்ன கவலை. ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல் இலவசங்கள் திடீரென நின்றுபோனால் கஷ்டம்தான். அப்போது பார்த்துக்கொள்ளலாம். அதுவரை அனுபவி ராஜா அனுபவி கதைதான். பட்ட பின்புதான் கெட்டநிலை தெரியவரும்....
தவசீலன்.அ - கோல்ஹாபூர்மகாராஷ்டிரா,இந்தியா
2010-10-16 07:46:53 IST
இங்கு கருத்து தெரிவித்துள்ள அனைவரையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.... கருணாநிதி ஒரு மனசாட்சி உள்ள மனிதன். ஆகையால்தான் லஞ்சத்திலும், ஊழலிலும் தானும், தன் உறவுகளும் கோடி, கோடியாக சம்பாதிக்கும் விஷயத்தை மக்கள் கண்டுக்கொள்ளாமல் இருக்க நூறு, ஆயிரம் என நம் பணத்தில் நமக்கே இலவசம் என்னும் பிச்சை போடுகிறார்....
Raajaraajan - Chennai,இந்தியா
2010-10-16 07:44:45 IST
இலவச பொருட்களை வாங்குபவர்களுக்கு வாக்கு உரிமை பிடுங்க வேண்டும் பிறகு எந்த அரசு இலவசம் வழங்கும்?...
ம.சங்கரலிங்கம் - ராஜபாளையம்,இந்தியா
2010-10-16 07:42:40 IST
தமிழர்கள் இலவசங்களின் கொத்தடிமை...
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-10-16 07:39:39 IST
ஒரு குடும்பம் வாழ மாநிலமே அழிந்து கொண்டு இருக்கும் வேளையில் இந்த நோட்டீஸ் தயாரித்த "மனம் வெதும்பும் தமிழனுக்கு" ஆயிரம் நன்றிகள்....
உமாமணி புலியுரான். - wenzhouசீனா,சீனா
2010-10-16 07:37:39 IST
அய்யா மனட்சாட்சி ,இன்னும் ஒன்ன விட்டுட்டியே ,கொஞ்ச நாளைக்கு முன்னாடி MRK .பன்னீர் செல்வம் அறிவித்தாரே இலவச நாப்கின் திட்டம் ,அத மறந்துட்டிய ...... வாழ்க நீ பல்லாண்டு. இலவச நாட்டில் [மன்னிக்கவும் தமிழ் நாட்டில் ] தைரியமா நீ வெளியில் வா லட்ச கணக்கான தமிழர்கள் உன் பக்கம்...
ஜெகன் - மதுரை,இந்தியா
2010-10-16 07:33:52 IST
இது ஒரு சிந்திக்கப்பட வேண்டிய விசயம்தான். ஏனெனில், ஒருபுறம் மக்களின் வறுமை, அதனால் அவர்களை குறைந்த பட்ச வறுமையில் இருந்து மீட்டல். மற்றொருபுறம் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள்; சோம்பேறித்தனம், பயன்படுத்தப்படுதல். என்னைபொறுத்த வரையில் மீனையும் கொடு. அதே வேளையில் அதைப் பிடிக்க கற்றும் கொடு. மீனை மட்டும் கொடுத்து கொடுத்து அவனை சோம்பேறியாக்கி நீ மட்டும் கொழுத்து விடாதே, மீன்பிடி கப்பல் வாங்கி உல்லாசம் செல்லாதே. ஒருவனின் ஏழ்மையை உன்னுடைய மூலதனமாக மாற்றாதே. ஒவ்வொரு இந்தியனும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். வசதியான ஒவ்வொருவரும் இன்னொருவரை தூக்கி விட்டால் அவன் ஏன் பிச்சை எடுக்க போகிறான். வெறுமனே நாம் அரசியல் வாதிகளை திட்டுவதை விட்டுவிட்டு நாம் ஒருவரையாவது உயர்த்தி அவர்களை பிச்சை எடுக்காமல் இருக்க உயர்த்தி இருக்கிறோமா என்று சிந்திப்போம். நாம் அதை செய்யாதவரை அரசியலுக்கு நல்ல லாபம் தான். ஏன் நீங்க கூட அரசியலுக்கு போய் சம்பாதிக்க போய்டுவீங்க. ஆச்சர்யப்பட ஒன்னும் இல்லைங்கோ....
kumar - malaysia,இந்தியா
2010-10-16 07:30:19 IST
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!'அல்ல..இது மொத்த தமிழகத்தின் (திமுக உடன்பிறப்புகளை தவிர) அனைத்து படித்த தமிழக நிலை கண்டு கவலை கொள்ளும் அனைவரின் மனம் இன்றளவும் வெதும்பி கொண்டு தான் இருக்கு என்பது தான் உண்மை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த இலவசங்களின் எதிர்கால கெடுதல்களை பற்றி தினமலரில் பல வாசக அன்பர்கள் என்னை உட்பட கருத்துக்கள் பதிய வைத்து இருந்தார்கள்.. சில மர்ம நபர்கள் என்பதை விட அந்த நோட்டீஸ் வெளியிடும் அந்த நல்ல நண்பர்கள் அருமையான நற்தொண்டு செய்து வருகிறார்கள். வாழ்த்துக்கள் அவர்களுக்கு. பொது மக்களிடம் விழிப்புணர்ப்பு ஏற்படுத்தி வருவது நல்ல ஒரு ஆரம்பம்..இதைப்போலவே தமிழக நலனில் அக்கறை உள்ளவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் உள் நோக்கம் இல்லாமால் இந்த துண்டு பிரசுர சேவைக்கு ஆதரவும் உற்சாகத்தையும் அளிக்க வேணும்.இந்த செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்ட எங்கள் தினமலர்க்கு நன்றிகள். இதையே முழு பக்க விளம்பரமாக தினமலர் பத்திரிக்கைக்கு வெளிநாட்டு இந்தியர்கள் சார்பாகவும் மற்றும் தமிழக தினமலர் வாசகர்களின் சார்பாகவும் வெளியிடலாம்.விளம்பர முடிவில் அந்த நல்ல நண்பர்களின் சேவைக்கு நன்றி சொல்லலாம்.நல்ல அருமையான வாசகங்கள் உள்ளன இந்த துண்டு பிரசுரத்தில். அவர்கள் வாழ்க பல்லாண்டு..அந்த நல்ல நண்பர்களின் சேவையில் நானும் பங்கு கொள்ளவிரும்புகிறேன்.அவர்களுக்கு என் முழு ஆதரவினை இந்த கருத்து மூலமாக தெரிவித்து கொள்கிறேன்.வாசக அன்பார்கள் தாங்களும் ஆதரவு வழங்க வேண்டுகிறேன். இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா.....ஆதரவு நல்கிடு........
Sankaran - cupertino,யூ.எஸ்.ஏ
2010-10-16 07:07:47 IST
வேலையே செய்யாமல் சம்பளமும் கிம்பளமும் வாங்கும் திமுக அனுதாப அரசு ஊழியர்களும் இதில் அடங்குவர்....
suresh - இந்திய,இந்தியா
2010-10-16 07:07:34 IST
இதில் சொலப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் உண்மை..... நம் தமிழ் நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு தான்.........
govind - hamiltan,நியூ சிலாந்து
2010-10-16 07:00:02 IST
ரொம்பவும் உண்மை. இந்த அரசு சோம்பேறிகளை உருவாக்குகிறது...
தமிழ்செல்வன் - சென்னை,இந்தியா
2010-10-16 06:57:50 IST
ஒரு ஜப்பானியர் சொன்னாராம்: எனக்கு மீனை கொடுக்காதே , தூண்டிலை கொடு என்று. இலவசமாக எனக்கு ஒன்றும் வேண்டாம், நான் உழைத்து சம்பாதிக்க எனக்கு வழி செய் என கூறுகிறார் இவர். நாமும் இப்படி இருக்க வேண்டும். அரசாங்கமே ...என்னை என்ன பிச்சைகாரன் என நினைத்தா ? எனக்கு உழைத்து ச்மபதிக்க தெரியும். தொழிற்சாலைகளை உருவாக்கு. பள்ளிகளை திற. நீ பண்ணும் ஊழலை குறை, மக்களின் பணத்தை சுருட்டதே, நாடு நன்றாக இருக்கும் ......
manibalamurugan - aruppukottai,இந்தியா
2010-10-16 06:48:32 IST
நல்ல கருத்தை சொன்ன சகோதரருக்கு நன்றி. வரவேற்புக்கு உரிய முயற்சி...
ரா. ராமஹரி - chennai,இந்தியா
2010-10-16 06:44:26 IST
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த மாதிரி அரசாங்க கஜானாவை காலியாக்கும் இத்திட்டங்கள் தமிழ் நாட்டின் சாபக்கேடாகும். தன் கட்சிக்கு ஓட்டு வேண்டும் என்பதற்காக செய்யும் இந்த தகிடு தத்தம் நிச்சயம் பயன் தராது. இந்த நோட்டீஸ் எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும். இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மை ஒழிய வேண்டும். தி மு க மறுபடி அரசு கட்டிலில் ஏறினால் இலவசம் எல்லாம் காலி ஆகி விடும். சோம்பேறி தமிழனுக்கு இந்தியாவில் மதிப்பே இருக்காது. இப்போதே பார்த்தால் பல ஓட்டல்களில் வட கிழக்கு மாநில மக்கள் வேலை செய்கிறார்கள். தமிழர்கள் கிடைப்பதில்லை. ஏனென்றால் தமிழன் மகா சோம்பேறி சோமாறி ஆகி விட்டான். இலவசம் என்பது போதை. அடிமையாக்கும் வலை. இப்போது டீ கடையில் உட்கார்ந்து அரசியல் அரட்டை அடிப்பது தான் தமிழனின் அடையாளமாகி விட்டது. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்....
கண்ணதாசன் - singapore,இந்தியா
2010-10-16 06:41:53 IST
கண்ணதாசன்,சிங்கப்பூர். நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்ட தமிழனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இலவசத்தை ஒழிப்பது நல்லது.......
ஜி.பன்னாடை பாண்டியன் - வுசி,சீனா
2010-10-16 06:36:28 IST
அருமையான செய்தி, எல்லோரும் வரவேற்கும் கட்டுரை. இலவசம் என்ற போர்வையில் ஒரு மிகப்பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. 30 விழுக்காடு போக மீதி எல்லாம் கடத்தப்பட்டு கரை வேட்டிகள் கொழுக்கின்றனர். இலவசத்தால் உருப்படாமல் போனது திருப்பூர் போன்ற சுறுசுறுப்பான நகரம். எல்லோரும் டிவி முன் உட்கார்ந்து சீரியலில் பொழுது போக்குகின்றனர். வேலைக்கு ஆள் இல்லை. கிராமபுரங்களில் உழவு தொழிலுக்கு டாட்டா காட்டி விட்டனர். இவர்கள் என்ன நல்லதா செய்கின்றனர்? எல்லா இலவச திட்டங்களுக்கு பின்னும் ஒரு மெகா பயனாளி உள்ளார். இலவசத்தின் பயன் முழுதாக திமுக மற்றும் அந்த கட்சியின் தலைவர்களுக்கு சென்றடைகிறது. எலும்பு துண்டு மக்களுக்கு வாசனைக்காக....
Barath - Chennai,இந்தியா
2010-10-16 06:34:13 IST
இலவசத்தை ஒழிப்பது நல்லது!! mobile also!!...
முருகயாஹ் - dubai,இந்தியா
2010-10-16 06:25:18 IST
ஆம் யோசிக்க வேண்டிய உண்மைகள். பசி உள்ளவனுக்கு ஒரு மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பதே மேல். இலவசத்தை இலவசமாக கொடுக்க எடுக்கப்பட்ட காசு நமது வியர்வைதான் என்பதை என்று தமிழன் உணர்வான்? இப்படிக்கு, இலவசங்களுக்கு விலை போன ஒரு அற்ப, கேவலமான தமிழன்....முருகயாஹ் tamilan...
கோ. லோகநாதன - Coimbatore,இந்தியா
2010-10-16 06:24:44 IST
உண்மைத் தமிழா , நன்றி....
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-10-16 06:06:13 IST
இதைத்தான் பெரும்பான்மை வாசகர்கள் தினமலரில் இப்பகுதியில் செய்து வருகிறார்கள். மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சியின் புலம்பல்களை வெளியிட்ட தினமலருக்கு நன்றி. ஆமா இன்று தினமலருடன் என்ன இலவசம்? ஆன்மிக மலரா, உடனே போய் வாங்க வேண்டும். ஆனால் இந்த இலவசம் படிக்க, பாதுகாக்க, அதன்படி நடக்க. இந்த இலவசம், இந்த இலவச நோட்டீஸ் போன்றது. இது ஒரு தொண்டு. அந்த இலவசத்தையும், இந்த இலவசத்தை ஒன்றாக நினைக்க வேண்டாம். என்ன கரைட்டா?...
வை சுப்பாராவ் - சிங்கப்பூர்,இந்தியா
2010-10-16 05:56:55 IST
இந்த 'நோட்டீஸ்' ஐ விநியோகித்தவர், லழகங்களின் அந்தக்கால பேச்சுகளை கேட்டிருக்கவில்லை போலும். ' மறத்தமிழா', 'வீரத்தமிழா', ' மனுநீதி சோழனின் தோன்றலே', ' வந்தாரை வாழ வைத்த தமிழகமே' இன்னுப் பல. இந்த அரசின் இலவசங்கள் தமிழ் 'குடி' மகன்களைத்தானே வளர்க்கின்றன, வடவரை அல்லவே. இதுகாறும் தமிழனின் உழைப்பை பிறர் சுரண்டினர், இது பிறரின் உழைப்பை அல்லவா சுரண்டி தமிழ் 'குடி; மகனி வாழ வைக்கிறது. இதில் குற்றமென்ன கண்டீர்.! . . . . .! இன்றைய செய்திப்படம் மட்டும் எதிர்மாறான செய்தியினை சொல்கிறது: சென்னையில் பிச்சைகாரர்களையும், . . . . . பிடித்துக்கொண்டு போவதாக ?...
subramani - Texas,யூ.எஸ்.ஏ
2010-10-16 05:52:00 IST
எல்லாரும் இப்படி நினைத்தாள் சோம்பேறியும் இருக்க மாட்டன் தில்லுமுல்லு காரணும் இருக்க மாட்டான். இப்போது தான் சிந்திக்க தொடங்கி உள்ளான் தமிழன்...
க .விமல்குமார் - சிங்கப்பூர்,இந்தியா
2010-10-16 05:24:02 IST
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!! ??இன்றாவது உலகத்துக்கு வெளிவந்ததே ! இலவசம். எதை அரசாங்கம் ஊக்குவிக்குதோ இலையோ இலவசமாக இலவத்தை ஊக்குவிக்கிறதே. திருந்துமா??...
Murali - Sandhurst,யுனைடெட் கிங்டம்
2010-10-16 05:16:50 IST
பாஸ் இவிங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டங்க. இலவசம்னா பினாயலயும் குடிப்பாங்க ... மானம்கெட்ட மக்கள் .... உழைச்சு சாப்புட தெரியாதவங்க...
vijay - singapore,சிங்கப்பூர்
2010-10-16 05:16:29 IST
உண்மை நிலையை சொல்லி நோட்டீஸ் பிரசுரித்த நண்பருக்கு வாழ்த்துக்கள். இதை பார்த்தாவது நம் மக்கள் சிந்தித்தால் நல்லது. அரசு இலவசமாக கொடுக்கும் அனைத்தும் இலவசமல்ல. இதைற்கு வட்டியுடன் நம்மிடமே வரியாக வசுலிகப்படுகிறது. இதை அக்கட்சி தன் பணத்தை இலவசமாக கொடுத்ததுபோல விளம்பரம் செய்துகொள்கின்றன... இதை பார்த்து மக்களும் நம்மி விடுகின்றனர். மீண்டும் ஒருமுறை நன்றி "மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி''க்கு ................
பாலா - கோயம்புத்தூர்,இந்தியா
2010-10-16 04:41:28 IST
உண்மையாகவே ஒவ்வொரு தமிழனும் மனனம் செய்ய வேண்டிய வரிகள். எழுதியது யாராக இருப்பினும் தமிழ் மண் தலை வணங்குகிறது. உணர்ச்சி இருந்தால் உணர்ந்து திருந்துங்கள்....
prabhu - woodlends,சிங்கப்பூர்
2010-10-16 04:41:26 IST
arumayana thundu prasuram..ithai padikara makkal thirunthuvangannu ninaikirengala..illava illa..innun t.v ikku bathilla ENTHIRAN ticket kodutha kandippa Kudumba katchiku otu pooduvanga.(summava sonnanga free ya kodutha pinayala kuda kudippan tamilan innu)..vazga antha thundu prasuram aditha nabar..ithu pondra aadhanga varthiyagal indrikku kandipaga thavai.manangeta makkalay thirundunga.aadhangathudan...max...
எ.பால்பாண்டியன் - தென்காசிPAVOORCHATRAM,இந்தியா
2010-10-16 03:47:07 IST
இந்த தமிழ்நாடு திருந்தாது...
கண்ணன் - சென்னை,இந்தியா
2010-10-16 03:24:45 IST
எல்லா தமிழனுக்கும் இந்த உணர்வு எப்போது வரபோகுதோ என்று தெரியவில்லை. உணமையிலுமே நீதான் தமிழன் க.கண்ணன் ஒலீன்ஸ்...
எபு - singapore,சிங்கப்பூர்
2010-10-16 03:11:53 IST
சாட்டையடி சொற்கள் !...
கார்த்தி... - Juffair,பஹ்ரைன்
2010-10-16 03:08:28 IST
இதில் என்ன பரபரப்பு. இது தான் நிதர்சனமான உண்மை.முடிந்தால் இந்த நோட்டீசை தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் கொடுக்க சொல்லுங்கள். மக்களே!!! நன்றாக சிந்தியுங்கள்...இலவசம் என்ற பெயரில் நம்மை பிச்சைகாரர்கள் ஆக்கி கொண்டிருக்கிறார்கள் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள். இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்டுங்கள்...உழைப்பே என்றும் உயர்வு தரும்!!!...
உள்ளூர்வாசி - india,இந்தியா
2010-10-16 02:58:20 IST
அந்த காலமாகட்டும், இந்த காலமாகட்டும், உழைத்து வாழ்கின்ற யாருமே,இலவசங்களை நம்புவதில்லை..இலவசங்களை பெறும் போது, அவர்களுக்கு நாம் அடிமை ஆகிறோம்..அது அரசியலாக இருந்தாலும் சரி...வியாபாரமாக இருந்தாலும் சரி..இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா?...
சோமு - அட்லாண்ட,யூ.எஸ்.ஏ
2010-10-16 02:24:41 IST
All, The message in the article/poster is very true. All these free televisions, gas stoves are coming from the Tax payer's money. These leaders are not giving it from their pocket..why would they give? Its a shame that we are attracted by these giveaways without releazing how it comes. So, please don't get fooled by these anymore. Elect the people whom you think is the best for the state/country. -Somu...
GB.ரிஸ்வான் - JEDDAH,சவுதி அரேபியா
2010-10-16 01:59:30 IST
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!'அல்ல..இது மொத்த தமிழகத்தின் (திமுக உடன்பிறப்புகளை தவிர) அனைத்து படித்த தமிழக நிலை கண்டு கவலை கொள்ளும் அனைவரின் மனம் இன்றளவும் வெதும்பி கொண்டு தான் இருக்கு என்பது தான் உண்மை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த இலவசங்களின் எதிர்கால கெடுதல்களை பற்றி தினமலரில் பல வாசக அன்பர்கள் என்னை உட்பட கருத்துக்கள் பதிய வைத்து இருந்தார்கள்.. சில மர்ம நபர்கள் என்பதை விட அந்த நோட்டீஸ் வெளியிடும் அந்த நல்ல நண்பர்கள் அருமையான நற்தொண்டு செய்து வருகிறார்கள். வாழ்த்துக்கள் அவர்களுக்கு. பொது மக்களிடம் விழிப்புணர்ப்பு ஏற்படுத்தி வருவது நல்ல ஒரு ஆரம்பம்..இதைப்போலவே தமிழக நலனில் அக்கறை உள்ளவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் உள் நோக்கம் இல்லாமால் இந்த துண்டு பிரசுர சேவைக்கு ஆதரவும் உற்சாகத்தையும் அளிக்க வேணும்.இந்த செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்ட எங்கள் தினமலர்க்கு நன்றிகள். இதையே முழு பக்க விளம்பரமாக தினமலர் பத்திரிக்கைக்கு வெளிநாட்டு இந்தியர்கள் சார்பாகவும் மற்றும் தமிழக தினமலர் வாசகர்களின் சார்பாகவும் வெளியிடலாம்.விளம்பர முடிவில் அந்த நல்ல நண்பர்களின் சேவைக்கு நன்றி சொல்லலாம்.நல்ல அருமையான வாசகங்கள் உள்ளன இந்த துண்டு பிரசுரத்தில். அவர்கள் வாழ்க பல்லாண்டு..அந்த நல்ல நண்பர்களின் சேவையில் நானும் பங்கு கொள்ளவிரும்புகிறேன்.அவர்களுக்கு என் முழு ஆதரவினை இந்த கருத்து மூலமாக தெரிவித்து கொள்கிறேன்.வாசக அன்பார்கள் தாங்களும் ஆதரவு வழங்க வேண்டுகிறேன். இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா.....ஆதரவு நல்கிடு.....
தமிழன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-10-16 01:50:25 IST
நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்ட தமிழனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நண்பா இதை நான் இணையத்தளத்தில் செய்து கொண்டு இருக்கிறேன்...
Ravikumar - Tirupur,இந்தியா
2010-10-16 01:41:48 IST
இந்த மாதிரி இலவசங்களை பார்த்து பழகிபோனதாலோ என்னவோ, நன் இன்று பயணித்த பேருந்து நடத்துனர் என் தோள் பையை பார்த்து என்ன TV யை உள்ளை வைத்து உள்ளீர்களா என கேட்டார். ஐயா கை பைக்குள் எப்படி டிவி யை அடைக்க முடியும் என கேட்டதும் விழித்தார். இதை படிக்கும் பொது அவர் கேட்டத்தில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவர் தினம் எத்தனை இலவசங்களை பர்த்தவரோ...... எனக்கு தான புதிதாக பட்டது ....
பாலா வானுமாமலை - எட்மண்டன்,கனடா
2010-10-16 01:37:06 IST
அருமையான முயற்சி. இது சம்பந்தமாக ஒரு கவிதையை "இளைஞனே எழுந்திரு! இமைதிற, விழித்திரு!" என்ற தலைப்பில் எனது "கள்ளிமலர் பிளாக்கில்" வைத்துள்ளேன். நன்றி தினமலர்....
ஷம்கீன் துபாய் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 01:34:07 IST
அப்படியே ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு பாட்டில் விஷமும் இலவசமாய் கொடுத்துட்டீங்கன்னா வேலை ரொம்ப ஈசியா முடிஞ்சிடும். ஏன்னா தமிழன் கொஞ்சம் கொஞ்சமா இலவச பிச்சைகாரனா சாகிறதை விட பொட்டுன்னு போய்டுவான். உங்களுக்கும் ஓட்டுப்போட- எதிர்க்க அப்படிலாம் ஆள் இருக்காது. பூமி அழிய்ற வரை நீங்களே ஆட்சி பண்ணலாம். ....
Ravikumar - Tirupur,இந்தியா
2010-10-16 01:27:15 IST
இதில் சொலப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் உண்மை..... நம் தமிழ் நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு தான்......
கவிதைகவிதைப்ரியன் - abudhabi,இந்தியா
2010-10-16 01:26:28 IST
சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட தகவல் நோட்டிஸ் அல்ல, எச்சரிக்கை. தமிழா விழித்துகொள்...
nagaraj - sydney,ஆஸ்திரேலியா
2010-10-16 01:19:10 IST
இன்னும் ஒரு தன்மான தமிழன் உயிருடன் இருப்பதில் பெருமை அடைகிறேன். தமிழினத் தலைவனை யாம் பெற்றதற்காக தரணி எங்கும் விழா எடுப்போம். தான் வழங்கும் இலவசத்தை நிறுத்த முடியாமல் இப்படி நோட்டீஸ் அடித்து தன் நிலையை நாட்டுக்கு சொல்ல வேண்டிய இன மான உணர்வை அறிந்து தலை வணங்குகிறேன்....
சிவா - chennai,இந்தியா
2010-10-16 01:16:36 IST
இவனுங்களுக்கு அறிவே வராது தலைவா... இலவசம் எல்லாம் தப்புன்னு ஒரு பிட் நோட்டீஸ் இலவசமா அடிச்சு கொடுத்தால் தான் புரியும்... பிட் நோட்டீசையே இலவசம்னு சொல்லி கொடுத்தாத்தான் வாங்குவான்......
சிவன் - கைலாஷ்,இந்தியா
2010-10-16 01:09:02 IST
ஆம் யோசிக்க வேண்டிய உண்மைகள். பசி உள்ளவனுக்கு ஒரு மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பதே மேல். இலவசத்தை இலவசமாக கொடுக்க எடுக்கப்பட்ட காசு நமது வியர்வைதான் என்பதை என்று தமிழன் உணர்வான்? இப்படிக்கு, இலவசங்களுக்கு விலை போன ஒரு அற்ப, கேவலமான தமிழன்....
ஸ்ரீராம் - அட்லாண்டா,யூ.எஸ்.ஏ
2010-10-16 01:02:48 IST
ஆஹா!!! இதே கருத்தை வலியுறுத்தி என்னை போல் பல பேர் இந்த தினமலரில் பலமுறை கருத்து தெரிவித்திருந்தோம். இதை அச்சில் ஏற்றி பொதுமக்களிடம் கொடுத்தவருக்கு பாராட்டுகள் பல. இதை போஸ்டர் அடித்து ஊர் முழுதும் ஒட்ட வேண்டும். அப்போதாவது இலவசத்தை மறந்து உழைபார்களா நம் தமிழர்கள்?...
அ.சந்திரன் - வடவன்பட்டி.துபாய்.,இந்தியா
2010-10-16 00:55:20 IST
நான் வெகு நாட்களாக நினைத்து இருந்ததை ஒரு தமிழன் அழகாக எழுதியதை வரவேற்கிறேன். என்று இலவசத்தை மறந்து உழைப்பை நம்புகிறானோ அன்று தான் தமிழன் வாழ்வில் உயரமுடியும். சபாஷ் தமிழா....
செந்தில் - India,இந்தியா
2010-10-16 00:50:10 IST
தப்பான "இலவச" அறிவிப்பு!முதலில் அரிசி இலவசம் இல்லை,ஒரு ரூபாயாவது கொடுத்துதான் வாங்க வேண்டும்,மேலும் அரிசியை மட்டுமே சாப்பிட முடியுமா என்ன?சாம்பார்,காய்கள் என மற்ற பொருட்கள் இலவசமா?எனவே அரிசி இலவசம் தப்பு! தொலைகாட்சி பார்க்க எங்கே மின்சாரம் இலவசம்?, அதில் கேபிள் டி.வி கனெக்சன் காசு கொடுத்துதான் பார்த்து ஆக வேண்டும்,எனவே இதுவும் இலவசம் ஆகாது!காஸ் அடுப்பு ஒகே!அதுக்கு காஸ் எங்கிருந்து வரும்? காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்,எனவே அதுவும் இலவசம் ஆகாது!குழைந்தைகள் படிப்புக்கு செலவு செய்வதெல்லாம் இலவசம் ஆகாது,அது பெற்றோர் மக்களை வளர்ப்பது எப்படி கடமையோ அது போல் அரசின் கடமை!அதுவும் இலவசம் இல்லை! ஏழை எளியோருக்கு மருத்துவம் சில குறிப்பிட்ட நோய்களுக்கு இலவசம் என்பது வழிந்த பொருளாதாரம் உள்ளதால் அரசு மக்களுக்கு செய்கிறது!இதுவும் கடமையே! பொருளாதரத்தில் வளர்ந்த நாடுகள் பலவற்றில் "இலவசம்" என்று நேராக இல்லாமல் அரசு பல மறைமுக சலுகைகளை வழங்குகிறது,அது போலதான் இதுவும்!...
அரசு - Chennai,இந்தியா
2010-10-16 00:18:03 IST
இலவசத்தை ஒழிப்பது நல்லது !!! நம்மை சோம்பேறிகளாக மாற்றுகிறது...
chnguy - chennai,இந்தியா
2010-10-16 00:15:43 IST
வேன்டாம் என்பவர்கள் விட்டு விடுகள்.....வாங்குபவர்கள் வாங்கட்டும்....IF YOU DONT WANT LEAVE IT, WHO EVER WANTS GET IT.......
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-10-16 00:15:05 IST
ஒரு தமிழனின் மனசாட்சி-ஓகே. அதென்ன கடசில உடன்பிறப்பே சிந்திப்பாயா? ன்னு போட்டு இருக்கு? உடன்பிறப்பு என்னிக்கு சிந்திச்சு இருக்கு? அந்த பிறப்போட சிறப்பே, சிந்திக்காம அடுத்தவன வசை பாடுவதுதான. எனிவேஸ், ரொம்ப நல்ல மனசாட்சி. உழைப்புக்கு பேர் போனவன்டா இந்த தமிழன்னு ஊரெல்லாம் நம்மள பாத்து சமுதாயம் வியந்தப்போ ரொம்ப பெருமையா இருந்திச்சு. மேலும் மேலும் உழைக்கனும் ன்னு ஒரு வெறி வந்திச்சு. ஆனா இன்னிக்கு அப்படி இல்ல. நம்மள மாறி மாடா உழைக்கிறவன் ஒரு பக்கம், அதையே மண்டி போட்டு ப்ரீயா திங்குறவன் ஒரு பக்கம் ன்னு உழைக்கிறவனுக்கு ஒரு மதிப்பே இல்லாம போனத பாத்து மனசு வெம்புது. அவனெல்லாம் சும்மா உக்காந்து சோறு திங்குரப்போ நாம என்ன மயித்துக்குடா உழைக்கனும்ன்னு ஆயாசமா இருக்கு. எவனோ ஒரு நாயி உக்காந்து திங்க நாம மாடு மாறி பாடு படனுமான்னு அளச்சலா இருக்கு. ஆனா அதுக்குன்னு உழைப்ப கை விடுவான் இந்த தமிழன்னு மட்டும் மனப்பால் குடிக்காதே உடன்பிறப்பே. உன்னை நினைத்த உடன் வருவது வெறுப்பே. கூடிய சீக்கிரம் தமிழன் தன் தவறை உணர்ந்து கலப்பைகளை கையில் எடுப்பான் என்று நம்புவோமாக....
malar - chennai,இந்தியா
2010-10-16 00:13:07 IST
வரவேற்கபடவேண்டிய விஷயம் தான். இன்றைய தமிழ்நாடு நிலைமை அப்படிதான் இருக்கிறது. சிந்திப்போம் செயல் படுவோம். இல்லையெனில் நமது சந்ததியினர் பிச்சை எடுக்க வேண்டும். திருடர்கள் உலா வருவர் பிற்காலத்தில்...

1 comment:

ieyakkam said...

உங்கள் கருத்துகள் செறிவானவை உங்களோடு கரம் கோர்த்து செயல்பட இயக்கம் தயாராக உள்ளது

என்றும் உண்மையுடன்

இயக்கம்